For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எகிப்தின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார் தலைமை நீதிபதி அட்லி மன்சூர்!

By Mathi
Google Oneindia Tamil News

கெய்ரோ: எகிப்தில் அரசைக் கைப்பற்றியிருக்கும் ராணுவம் அறிவித்தபடி தலைமை நீதிபதியான அட்லி மன்சூர் இடைக்கால அதிபராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

எகிப்து அதிபராக இருந்த மோர்ஸிக்கு எதிராக நாட்டில் கலவரம் வெடித்து புரட்சியாக உருமாறியது. பெருங்குழப்பம் நீடித்து வந்த நிலையில் முடிவுகட்ட ராணுவம் அரசைக் கைப்பற்றியது. அதிபர் மோர்ஸியை டிஸ்மிஸ் செய்து வீட்டுக் காவலில் வைத்ததுடன் தற்போதைய அரசியல் அமைப்பையும் தடை செய்தது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் வரை நாட்டின் தலைமை நீதிபதியான அட்லி மன்சூர் இடைக்கால அதிபராக இருப்பார் என்றும் ராணுவம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து இன்று அட்லி மன்சூர் இன்று இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தமது உரையில், எகிப்தின் இளைஞர்களின் மாற்றத்துக்கான பங்களிப்புக்கு பாராட்டுத் தெரிவித்தார். அதேபோல் சட்டத்தைப் பாதுகாத்த போலீசாருக்கும் அவர் தமது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்தார்.

English summary
The top judge of Egypt's Constitutional Court, Adly Mansour, sworn in as interim leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X