For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிக்கோலஸ் தெஸ்லா... இவர் தான் ‘இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர்’

Google Oneindia Tamil News

நியூயார்க்: இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரிய நிக்கோலஸ் தெஸ்லா. இவரது பிறந்த தினம் கடந்த 10ம் தேதியாகும்.

1856ம் வருடம், ஜூலை 10ம் தேதி பிறாந்தவர் நிக்கோலா தெஸ்லா. பின்னாளில் கண்டுபிடிப்பாளரும், இயந்திரப் பொறியாளரும், மின்பொறியாளரும் ஆன நிக்கோலா, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான பங்களிப்புகள் எண்ணிலடங்காதது.

தெல்சாவின் காப்புரிமைகளும், கோட்பாட்டுகளும்; பன்னிலைமை மின் வழங்கல் முறைமைகள், மாறுதிசை மின்னோட்ட மோட்டார்கள் என்பன உள்ளிட்ட, தற்கால மாறுதிசை மின்னோட்ட மின் வலு முறைமைகளின் அடிப்படையாக அமைந்தன. இவற்றின் மூலம் இவர் இரண்டாம் தொழிற்புரட்சி ஒன்று உருவாவதற்கு உதவினார். இவரது சமகால வரலாற்றாளர்களால், இவர் "இயற்பியலின் தந்தை" என்றும், "இருபதாம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவர்" என்றும், "தற்கால மின்னியலின் காப்பாளர்" என்று போற்றப் பட்டார்.

மார்க்கோனிக்கு 1909-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்ட பிறகு, 1915-ம் ஆண்டு தாமசு ஆல்வா எடிசன் மற்றும் தெஸ்லாவிற்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு, பகிர்ந்தளிப்பதாக வெளியான தகவல் மிகப்பெரிய பிரச்சினையை உண்டாக்கியது. இதனால் அந்த நோபல் பரிசினை பெற்றுக் கொள்ள இருவருமே மறுத்து விட்டனர்.

1943ம் வருடம் ஜனவரி 7ம் நாள் மறைந்த அன்னாரது நூற்று ஐம்பத்தி ஏழாவது பிறந்த நாள் நேற்று முன் தினம் கொண்டாடப் பட்டது. அவரைக் கௌரவிக்கும் விதமாக அவரது முக்கியமான கண்டுபிடிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா...

ரிமோட் கண்ட்ரோல்...

ரிமோட் கண்ட்ரோல்...

இன்று அமர்ந்த இடத்தில் இருந்தே, ரிமோட் கண்ட்ரோல் மூலம் அனைத்து மின்னணு பொருட்களையும் இயக்குகிறோமே, அதன் முன்னோடி இவர் தான். 1898ம் ஆண்டு உலகிற்கு முதன்முதலாக ரிமோட் மூலம் கருவிகளை இயக்கிக் காட்ட முடியும் என நிரூபித்தார்.

ரோபோட்:

ரோபோட்:

சிந்திக்கும் ரோபோட், சாப்பிடும் ரோபோட் என நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக விதவிதமான ரோபோக்களைக் கண்டு பிடித்து வருகிறார்களே, அவை எல்லாவற்றிற்கும் பிள்ளையார் சுழி போட்டவர் தெஸ்லா தான். இவர் கண்டுபிடித்த ரிமோட் கண்ட்ரோல் ரோபோ தான் உலகிலேயே முதல் ரோபோ என கௌரவிக்கப் பட்டு வருகிறது. இதனால், இவர் ‘ரோபோக்களின் தந்தை' எனவும் அழைக்கப் படுகிறார்.

எலெக்ட்ரிக் மோட்டார்ஸ்:

எலெக்ட்ரிக் மோட்டார்ஸ்:

1888ல் தெஸ்லா, எலெக்ரிக் மோட்டார்களைக் கண்டு பிடித்தார். இதனைப் பொருத்தி கார்கள் வெற்றிகரமாக செயல் படுத்தப் பட்டன.

ரேடியோ:

ரேடியோ:

தெஸ்லா கண்டு பிடித்ததிலேயே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது ரேடியோ தான். ஆனால், இத்தாலிய விஞ்ஞானியான மார்க்கோனி, வரலாற்றில் ரேடியோ கண்டுபிடித்தவர் என்ற பெயரைத் தட்டிச் சென்று விட்டார். ஆனால், உண்மையில் மார்க்கோனி, தெஸ்லாவின் 1901 ம் வருடத்து கண்டுபிடிப்பை ஆதாரமாக வைத்தே தனது ரேடியோவை உருவாக்கினார்.

நியான் லைட்டுகள்:

நியான் லைட்டுகள்:

நாம் இப்போது பார்க்கும் நியான் விளக்குகளை ஒத்த நியான் மற்றும் புளோரசண்ட் விளக்குகளை 1893லேயே கண்டு பிடித்தவர் தெஸ்லா.

English summary
Wednesday is inventor Nikola Tesla's 157th birthday. The Serbian engineer, who moved to the U.S. at age 35, is considered one of the most important and most overlooked inventors of all time -- as he lost the spotlight again and again in the 19th century to the flashier Thomas Edison. Indeed, his rivalry with Edison morphed into one of the most epic battles of all time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X