For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆன்லைன் ஷாப்பிங்கிலும் பெண்கள்தான் டாப்...!

Google Oneindia Tamil News

டெல்லி: கடைக்குப் போனால் சாமானியமாக திரும்ப மாட்டார்கள் பெண்கள் என்பது முதுமொழி. இப்போது ஆன்லைன் ஷாப்பிங்கிலும் அவர்கள்தான் கலக்குகிறார்களாம்.

சர்வே ஒன்று இதைத் தெரிவிக்கிறது. அதேசமயம், பெரும்பாலும் இவை விண்டோ ஷாப்பிங்காகவே இருக்கிறதாம்.

பெண்கள் ஷாப்பிங் போனால் கூடப் போக பயந்து அலறும் ஆண்கள்தான் அதிகம். காரணம், பெண்கள் ஷாப்பிங்கின்போது எடுத்துக் கொள்ளும் நேரம்.

இப்போது ஆன்லைன் ஷாப்பிங்கிலும் பெண்கள்தான் கோலோச்சுவதாக சர்வே ஒன்று கூறுகிறது.. அந்த விவரம்.

மாதம் 3 முறை

மாதம் 3 முறை

சராசரியாக 70 சதவீத பெண்கள் மாதத்திற்கு 3 முறை ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்கிறார்களாம்.

கூப்பன் ஷாப்பிங்

கூப்பன் ஷாப்பிங்

6 பேரில் ஐந்து பேர் கூப்பன்கள் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதாக கூறினர்.

20 முதல் 35 வயதுக்குள்

20 முதல் 35 வயதுக்குள்

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் பெண்களின் சராசரி வயது 20 முதல் 35க்குள் இருக்கிறதாம்.

பொருளாதார சுதந்திரம்தான் காரணம்

பொருளாதார சுதந்திரம்தான் காரணம்

இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட அனைவருக்குமே பொருளாதார சுதந்திரம் இருக்கிறது. குறிப்பாக பெண்களின் நிலை நன்றாகவே மேம்பட்டுள்ளது. எனவேதான் அவர்கள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வதாக தெரிவித்துள்ளனர் சர்வே நடத்தியவர்கள்.

English summary
Didn't women just love window shopping? If a new survey is to be believed, they're doing this online. The study, conducted by cuponation.in, a portal which offers coupons and vouchers from leading online retailers, shows that 70 percent of respondents shopped online more than three times a month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X