For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2500 கி எடை.. 5 மீ நீளத்தில்.. 7.5 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, ‘நாசூட்டு செர்ராடாப்ஸ் டைட்டுசை’

Google Oneindia Tamil News

நியூயார்க்: சுமார் 2500 கிலோ எடை கொண்ட புதிய டைனொசோர் இனம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

அமெரிக்காவில் உள்ள யூட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லுயிரியல் நிபுணர்களின் ஆராய்ச்சியில் இந்த அரிய வகை டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, நாசூட்டுசெர்ராடாப்ஸ் டைட்டுசை என்று பெயரிடப்பட்டுள்ளது.

2500 கிலோ எடை...

2500 கிலோ எடை...

இந்தப் புதிய வகை ட்ரைசெர்ராடாப்ஸ் பிரிவைச் சேர்ந்த இந்த டைனொசோர். பொதுவாக இவை ஐந்து மீட்டர் நீளம் வளரக் கூடியதாகவும், இரண்டாயிரத்து ஐநூறு கிலோ பருமன் கொண்டதாகவும் இருந்துள்ளது.

பெரிய மூக்கு, கொம்பு...

பெரிய மூக்கு, கொம்பு...

மிகப் பெரிய மூக்கும் அளவுக்கதிகமான நீளம் கொண்ட கொம்பும் இந்த டைனோசர்க்கு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஏழரை ஆண்டுகளுக்கு முன்...

ஏழரை ஆண்டுகளுக்கு முன்...

இந்தவகை ராட்சத விலங்கினம் சுமார் ஏழரை கோடி ஆண்டுகள் முன்பு பூமியில் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியில் உறுதியாகியுள்ளதாம்.

தாவர உண்ணி...

தாவர உண்ணி...

வித்தியாசமான உடல் வாகுடன் பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு மிருகமாக இந்த டைனோசர்கள் இருந்தாலும், இவை ஒரு தாவர-உண்ணி விலங்குதான்.

செடி, கொடியில் வாழ்க்கை...

செடி, கொடியில் வாழ்க்கை...

இந்த வகை டைனோசர்கள் சதுப்பு நிலக் காடுகளின் செடிகொடிகளில் தங்கியிருந்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Paleontologists in Utah have not only discovered a new species of dinosaur; the recently described skull actually represents an entirely new genus with an unusually large nose and long, front-facing horns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X