For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆப்பிள், தக்காளி தோலை தூக்கி போட்றாதீங்க...: வாட்டர் பில்டரா பயன்படுத்தலாம்!

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: ஆப்பிள் மற்றும் தக்காளியின் தோலை பயன் படுத்தி குடிநீரை சுத்திகரிக்க இயலும் என சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளார் கண்டு பிடித்துள்ளார்.

தற்போது, நீரை சுத்திகரிக்க பல்வேறு முறைகள் கடைபிடிக்கப் படுகின்றன. ஆனால், அவற்றின் விலைகளோடு ஒப்பிடுகையில் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வறியவர்கள் அவற்றை வாங்கிப் பயன் படுத்துவது என்பது பெரும்பாலும் சாத்தியமில்லாத ஒன்றாகி விடுவது மறுக்க முடியாத உண்மை.

அதே சமயம், பெரும்பான்மையான நோய்கள் நீர் மூலமாக பரவுகின்றன என்பதும் நிஜம். எனவே, தற்போது சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் குறைந்த செலவில் தண்ணீரை சுத்தப்படுத்தும் முறைமையைக் கண்டறிந்துள்ளனர்.

குடிநீர் சுத்திகரிப்பு...

குடிநீர் சுத்திகரிப்பு...

சிங்கப்பூர் நேஷனல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளவர் ராம்கிருஷ்ணா மல்லம்பட்டி. அடிப்படையில் இவர் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது கண்டுபிடிப்பு தான் தோல்கள் மூலம் நீரை தூய்மையாக்கும் தொழிற்நுட்பம்.

நீக்கும் தன்மை...

நீக்கும் தன்மை...

பொதுவாக, தக்காளி தோல்கள் மாசுபட்ட தண்ணீரின் கழிவு பொருட்கள், அதில் கரைந்திருக்கும் ரசாயனம் மற்றும் சாய பொருட்கள், பூச்சி கொல்லி மருந்துகளை நீக்கும் தன்மை கொண்டவை.

உறிஞ்சும் திறன்...

உறிஞ்சும் திறன்...

அதே போன்று ஆப்பிள் தோலுக்கு தண்ணீரில் கரைந்து கலந்திருக்கும் கழிவுகளை உறிஞ்சும் சக்தி உள்ளது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீர் சுத்திகரிப்பு...

நீர் சுத்திகரிப்பு...

ஆகவே, இவற்றின் தோல்களைப் பயன் படுத்தி அசுத்தமாக உள்ள நீரை குடிநீராக மாற்ற இயலும் என நிரூபித்திருக்கிறார் ராமகிருஷ்ணா.

குறைந்த செலவு...

குறைந்த செலவு...

இந்தப் புதிய தொழிற்நுட்பத்தின் மூலம் நீரைத் தூய்மைபடுத்த மிகக் குறைந்த அளவு செலவே ஆகும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் இவர்.

கரண்ட் வேணும்...

கரண்ட் வேணும்...

ஆனால், இவரது இந்த கண்டுபிடிப்பிற்கு மின்சாரமும், சிறிதளவு ரசாயனமும் தேவை என்பது முக்கிய விஷயம்.

English summary
Researchers at the National University of Singapore have shown that apple and tomato peels can be used to remove pollutants in water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X