For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒஹியோ இளம்பெண்கள் பலாத்கார வழக்கு… குற்றவாளிக்கு 1000 ஆண்டு சிறை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஒஹியோ: அமெரிக்காவில் க்லிவ்லாந்து பகுதியில் 3 பெண்களை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், அதன் பிறகு 1000 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் 10 ஆண்டுகளுக்குப் பின்பு சமீபத்தில் ஒரே வீட்டில் மீட்கப்பட்டனர்.

அமாண்டா பெர்ரி என்பவர் 2003ஆம் ஆண்டு தன்னுடைய 16 வது வயதில் காணாமல் போனார். 2004ல் காணாமல்போன ஜீனா டிஜீஸெஸுக்கு அப்போது 14 வயதுதான் ஆகியிருந்தது. இவர்களுக்கெல்லாம் முன்பாக 2002ல் காணாமல்போன மிஷெல் நைட்டுக்கு தொலைந்த போது அவரது வயது 19.

கிலீவ்லாந்தின் தெற்கு பகுதியில் இருந்த ஒரு வீட்டில் பல வருடங்களாக அடைபட்டுக் கிடந்த இந்த 3 பெண்களில் அமாண்டா பெர்ரி, விடுதலைக்காக பரபரபரப்பான முயற்சி ஒன்றில் இறங்கினார்.

தங்களை அடைத்துவைத்திருந்தவர் வீட்டை விட்டு வெளியே சென்ற நேரத்தில் அமாண்டா பெர்ரி உதவி கோரி கூச்சலிட்டார்.

இந்தச் சத்தம் பக்கத்து வீட்டில் இருந்த சார்ல்ஸ் ராம்சே என்பவர் காதில் விழ, பூட்டியிருந்த கதவை அவர் உடைத்து திறந்துவிட்டார். அந்தப் பெண் வெளியில் வந்து உடனடியாக 911 தொலைபேசி அவசர உதவி சேவைக்கு அழைத்தார். உடனடியாக போலீசார் வந்து அனைவரையும் விடுவித்துள்ளனர்.

இது தொடர்பாக காஸ்ட்ரோ என்பவனை போலீசார் கைது செய்தனர். இவன்தான் பெண்களை கடத்தி வைத்து பலாத்காரம் செய்து சித்ரவதை செய்துள்ளான். இது குறித்து வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், காஸ்ட்ரோவுக்கு ஆயுள் தண்டனையும், அது முடிந்த பிறகு 1000 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

English summary
After facing more than 970 charges for kidnapping three women in Cleveland and holding them captive and sexually assaulting them for about 11 years, Ariel Castro is finally facing justice. While he was able to dodge the death penalty, according to USA Today, Castro accepted a plea deal today that will give him life in prison without the chance of parole, and a whopping 1,000 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X