For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா எம்.பிக்களில் 30% பேர் கிரிமினல் வழக்குகளை சுமப்பவர்கள்...

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நடப்பு லோக்சபா எம்.பிக்களில் 162 பேர் அதாவது 30% பேர் கிரிமினல் வழக்குகளை சுமப்பவர்கள் என்று ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை கடந்த 10 ஆண்டுகால வேட்பாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்களின் சரித்திரப் பக்கங்களை அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை வைத்து ஆய்வு செய்தது. இதனடிப்படையில் அந்த அமைப்புகள் நேற்று ஆய்வறிக்கையை வெளியிட்டன.

இதில் நடப்பு லோக்சபா எம்.பிக்களில் 30% பேர், ராஜ்யசபா எம்.பிக்களில் 17% பேர் கிரிமினல் வழக்குகளை தோளில் சுமப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. அத்துடன் சிவசேனா கட்சியால் கடந்த 10 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏக்களில் 75% மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த ஆய்வு அறிக்கையின் முடிவுகள் பற்றிய ஒரு பார்வை...

62,847 பேர் போட்டி

62,847 பேர் போட்டி

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகாலத்தில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா தேர்தலுக்குப் போட்டியிட்ட 62,847 வேட்பாளர்கள் தாக்கல் செய்த விவரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

8790 எம்.பி/எம்.எல்.ஏக்கள்

8790 எம்.பி/எம்.எல்.ஏக்கள்

2004 ஆம் ஆண்டு முதல் சட்டசபை அல்லது லோக்சபாவில் இடம்பெற்றிருந்த 8790 பேரின் பின்னணி ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

18% கிரிமினல்கள்

18% கிரிமினல்கள்

போட்டியிட்ட 62,847 வேட்பாளர்களில் 11,063 பேர் கிரிமினல்கள் (18%). அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன.

சீரியஸ் கிரிமினல்கள்

சீரியஸ் கிரிமினல்கள்

இந்த 11,063 பேரில் 5253 பேர் மீது கடும் தண்டனை விதிக்கக் கூடிய வகையிலான சீரியஸ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

162 எம்.பிக்கள் கிரிமினல்கள்

162 எம்.பிக்கள் கிரிமினல்கள்

நடப்பு லோக்சபாவில் மொத்தம் 543 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் 162 பேர் (30%) மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 76 பேர் (14%) மீது கடும் தண்டனைக்குரிய குற்றங்கள் பதிவாகி இருக்கின்றன.

40 ராஜ்யசபா எம்.பிக்கள் கிரிமினல்கள்

40 ராஜ்யசபா எம்.பிக்கள் கிரிமினல்கள்

நடப்பு ராஜ்யசபாவில் 232 எம்.பிக்களில் 40 பேர் (17%) மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர்களில் 16 பேர் மீது ( 7%) கடும் தண்டனைக்குரிய குற்றங்கள் பதிவாகியுள்ளன.

1258 எம்.எல்.ஏக்கள் கிரிமினல்கள்

1258 எம்.எல்.ஏக்கள் கிரிமினல்கள்

மாநிலங்களில் உள்ள 4032 எம்.எல்.ஏக்களில் 1258 பேர் (31%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் 15% பேர் மீது கடும் தண்டனைக்குரிய குற்றங்கள் நிலுவையில் இருக்கின்றன.

2004 முதல்..

2004 முதல்..

2004ஆம் ஆண்டு முதல் 8790 எம்.பி/எம்.எல்.ஏக்களின் விவரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில் 2575 பேர் (29%) மீது கிரிமினல் வழக்குகள் இருந்துள்ளன. இவர்களில் 1187 பேர் (14%) மீது சீரியஸ் கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருந்தன.

சிவசேனாவுக்கு முதலிடம்

சிவசேனாவுக்கு முதலிடம்

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் சிவசேனாவின் எம்.பி/எம்.எல்.ஏக்களில் 75% மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 137 எம்.பிக்கள், 103 எம்.எல்.ஏக்கள் அடக்கம்.

ஆர்.ஜே.டிக்கு 2வது இடம்

ஆர்.ஜே.டிக்கு 2வது இடம்

இந்த 'பெருமைமிகு' பட்டியலில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. அக்கட்சியின் 46% எம்.பி, எம்.எல்.ஏக்களும் ஐக்கிய ஜனதா தளத்தின் 44% எம்.பி,எம்.எல்.ஏக்களும் கிரிமினல் வழக்குகளை சுமப்பவர்கள்.

பாஜக, காங்கிரஸ் எப்படி?

பாஜக, காங்கிரஸ் எப்படி?

2004ஆம் ஆண்டு பாரதிய ஜனதாவால் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களில் 31%, காங்கிரஸால் நிறுத்தப்பட்ட வென்றோரில் 22% பேர் கிரிமினல் வழக்குகளை தோளில் தாங்கியவர்கள்.

English summary
About 30 percent of Lok Sabha members and 17 percent of Rajya Sabha members have criminal cases pending against them,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X