For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யார் பிரதமர்? மோடிக்கு 19%- ராகுலுக்கு 12%- கருத்துக் கணிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Narendra Modi trails Rahul in south, is English a factor?
டெல்லி: தி ஹிண்டு- சி.என்.என்.ஐபிஎன் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமராக மோடிக்கு 19% பேரும் ராகுலுக்கு 12% பேரும் வாக்களித்துள்ளனர். அதே நேரத்தில் தென்னிந்தியாவில் மோடிக்கு அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை.

தற்போதைய நிலையில் லோக்சபா தேர்தல் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக இக்கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பிரதமராக யாரை ஆதரிப்பீர்கள் என்ற கருத்து கணிப்பும் நடத்தப்பட்டது.

நரேந்திர மோடி பிரதமராக 19%, ராகுல் காந்திக்கு 12%, சோனியாவுக்கு 5%, மன்மோகன்சிங்குக்கு 6%, மாயாவதிக்கு 3%, அத்வானிக்கு 2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எந்தக் கருத்தும் இல்லை என 39% தெரிவித்துள்ளனர்.

வட இந்தியாவில் மோடிக்கு 37%, ராகுலுக்கு 29% ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் மோடிக்கு 17%, ராகுலுக்கு 37% ஆதரவு கிடைத்துள்ளது. மேற்கு இந்தியாவில் மோடி-43%, ராகுலுக்கு 33%, மத்திய இந்தியாவில் மோடிக்கு 41%, ராகுலுக்கு 29%, கிழக்கு இந்தியாவில் மோடிக்கு 34%, ராகுலுக்கு 30% ஆதாவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களில் 45% ராகுலையும் 18% மோடியையும் ஆதரிக்கின்றனராம்.

சரி காங்கிரஸில் யார் பிரதமராக வேண்டும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது?

காங்கிரஸைப் பொறுத்தவரையில் ராகுல் -48%, சோனியா 16%- மன்மோகன்சிங் -14%, ப.சிதம்பரம்-2% ஆதரவு உள்ளது.

பாரதிய ஜனதாவில், மோடி-66%, அத்வானி 12%, சுஷ்மா -5%, அருண் ஜேட்லி, ராஜ்நாத்சிங் ஆகியோருக்கு தலா 1% ஆதரவு உள்ளது.

English summary
The CNN-IBN poll survey in partnership with The Hindu (conducted by the CSDS, New Delhi) revealed on Friday that Gujarat Chief Minister Narendra Modi is leading the pack as the most-favoured prime ministerial candidate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X