For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடக் கருமமே.. 'இதுக்கெல்லாமா' தீயணைப்பு வீரர்கள் வரணும்...???

Google Oneindia Tamil News

லண்டன்: லண்டன் தீயணைப்பு வீரர்கள் செம கடுப்பில் உள்ளனர். தீவிபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கவும், ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கவும் விரையும் அவர்களுக்கு இப்போது வரும் பெரும்பாலான தொலைபேசி அழைப்புகளெல்லாம் கருமம் பிடித்த விஷயத்திற்காகவே இருக்கிறதாம்.

எல்லாத்துக்கும் இந்த 50 ஷேட்ஸ் ஆப் கிரே புத்தகம்தான் காரணம் என்று அவர்கள் கடுப்பாக கூறுகிறார்கள்.

அந்த அளவுக்கு இந்த புத்தகம் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் காமத் தீயைத் தூண்டி விட்டு எங்களை அலைக்கழிக்கிறது என்றும் அவர்கள் புலம்புகிறார்கள்.

50 ஷேட்ஸ் ஆப் கிரே

50 ஷேட்ஸ் ஆப் கிரே

இங்கிலாந்தைச் சேர்ந்த இ.எல்.ஜேம்ஸ் என்ற பெண் எழுத்தாளர் எழுதிய நூல்தான் இந்த 50 ஷேட்ஸ் ஆப் கிரே நூல். இது காமம் குறித்த நூலாகும். இந்த நூலைப் படித்த பிறகு இங்கிலாந்தில் பிள்ளைப் பேறு அதிகரித்திருப்பதாகவும், ஆண், பெண்களிடையே செக்ஸ் உறவு அதிகரித்திருப்பதாகவும் ஏற்கனவே பல சர்வேக்கள் கூறின. இப்போது தீயணைப்புப் படையினருக்கு இந்த புத்தகம் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாம்.

புத்தகத்தில் உள்ளது போலவே...!

புத்தகத்தில் உள்ளது போலவே...!

இந்தப் புத்தகத்தில் எப்படியெல்லாம் நாயகனும், நாயகியும் உறவு வைத்துக் கொள்கிறார்கள். என்ன மாதிரியான முறைகளையெல்லாம் கடைப்பிடிக்கிறார்கள் என்பது விலாவாரியாக படத்தோடு கொடுக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் இங்கிலாந்துக்காரர்கள் பாலோ செய்ய ஆரம்பித்திருப்பதே தீயணைப்பபு் படையினரின் சிக்கலுக்குக் காரணம்.

படுக்கை அறையில் கைவிலங்கிட்டு...!

படுக்கை அறையில் கைவிலங்கிட்டு...!

இந்த நூலில் படுக்கை அறையில் கைகளை விலங்கிட்டு கட்டி உறவு கொள்வது போல காட்சிகள் வருகின்றன. இதையடுத்து தற்போது இங்கிலாந்தில் பலரும் கைவிலங்குகளை வாங்கி அதை தங்களது துணையின் கைகளை கட்டி உறவு கொள்கிறார்களாம்.

மாட்டியாச்சு.. கழற்ற முடியலையே...!

மாட்டியாச்சு.. கழற்ற முடியலையே...!

ஆனால் இங்குதான் சிக்கல். பலருக்கு கை விலங்குகளை மாட்டத் தெரிந்த அளவுக்கு அதை பத்திரமாக மீண்டும் கழற்றத் தெரியவில்லை. இதனால் உறவு முடிந்து கழற்ற முடியாமல் பயந்து போய் தீயணைப்பு படையினருக்குப் போன் செய்து வரவழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.

ஏடாகூடமாக சிக்கிய 79 பேர்

ஏடாகூடமாக சிக்கிய 79 பேர்

இப்படித்தான் கடந்த சில மாதங்களில் மட்டும் 79 பெண்கள் கை விலங்குகளை கழற்ற முடியாமல் தீயணைப்புப் படையினரை வரவழைத்து அதை அவிழ்த்தார்களாம்.

ஆண்குறியில் கீ செயின்!

ஆண்குறியில் கீ செயின்!

அதேபோல ஆண்களுக்கும் சில சிக்கல்கள் வந்து தீயணைப்புத் துறையினரை நாடியுள்ளனராம். அதாவது 9 ஆண்கள், தங்களது ஆண்குறியில் கீ செயினை மாட்டிக்கொண்டு அதை எடுக்க முடியாமல் தவித்து தீயணைப்பு வீரர்களை அழைத்து கழற்றினார்களாம்.

இதுவரை 1300 போன் அழைப்புகள்!

இதுவரை 1300 போன் அழைப்புகள்!

இப்படி கைவிலங்கை கழற்ற முடியாமல் போனது, கீ செயினை எடுக்க முடியாமல் போனது, மாடிப்படியில் சங்கிலியால் பிணைத்துக் கொண்டு உறவு வைத்து பின்னர் மீள முடியாமல் தவித்தது என கிட்டத்தட்ட 1300க்கும் மேற்பட்ட அழைப்புகள் கடந்த 2010ம் ஆண்டிலிருந்து வந்துள்ளனவாம்.

விதம் விதமான சிக்கல்!

விதம் விதமான சிக்கல்!

வீ்ட்டிலிருக்கும் பல்வேறு விதமான பொருட்களை செக்ஸ் விஷயங்களுக்குப் பயன்படுத்தி அதில் சிக்கி ஆபத்து காப்பாற்றுங்கள் என்று அலறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறதாம்.

307 பேர் காயம்

307 பேர் காயம்

இப்படி நூதனமான முறையில் செக்ஸில் ஈடுபட்டு சிக்கி அதனால் காயமடைந்தோர் எண்ணிக்கை 307 என்றும் தீயணைப்புத்துறை கூறியுள்ளது.

வாக்குவம் கிளீனர் எதுக்கு...அதுக்கா...??

வாக்குவம் கிளீனர் எதுக்கு...அதுக்கா...??

ஒரு நபர் தனது ஆண்குறி வாக்குவம் கிளீனரில் சிக்கியிருப்பதாக கூறி தீயணைப்புத் துறையினரை வரவழைத்து மீண்டாராம். இன்னொருவரோ, தனது ஆண்குறி டோஸ்டரில் சிக்கிக் கொண்டதாக கூறி போன் போட்டாராம்.

சூதானமா இருங்கப்பா...!

சூதானமா இருங்கப்பா...!

இதுகுறித்து தீயணைப்புத் துறையினர் கூறுகையில், அவசரமான காரியங்களுக்காகவே தீயணைப்புத் துறை உள்ளது. இதுபோன்ற சிக்கல்களுக்கெல்லாம் வந்தால் மக்களின் வரிப்பணம்தான் தேவையில்லாமல் வீணாகிறது. எனவே மக்கள் மிகுந்த கவனத்தோடு எதிலும் ஈடுபட வேண்டும் என்று கூறுகின்றனர்.

English summary
It is emergency calls that firemen are expected to answer, not embarrassing ones. But thanks to the popularity of the erotic novel Fifty Shades of Grey, they are increasingly being called out to free people handcuffed to beds. London Fire Brigade said it had turned out to 79 such incidents - and nine instances of men with rings stuck on their penises - and urged people 'always keep the keys handy'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X