For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகா இடைத்தேர்தல்: மாண்டியா தொகுதியில் காங். வேட்பாளராக போட்டியிடுகிறார் நடிகை குத்து ரம்யா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Ramya, Anitha Kumaraswamy in by-poll race
பெங்களூர்: பிரபல கன்னட நடிகை ரம்யா, கர்நாடகா மாநிலம், மாண்டியா எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

பிரபல கன்னட நடிகையான ரம்யா, தமிழில் 'குத்து', 'கிரி', 'பொல்லாதவன்', 'தூண்டில்' 'வாரணம் ஆயிரம்', 'சிங்கம் புலி' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கர்நாடக முன்னாள் முதல்வரும் தற்போதைய மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணாவின் பேத்தியாவர். இவருக்கு லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிட சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் புறநகர் தொகுதி எம்.பி.யாக இருந்த குமாரசாமியும், மாண்டியா எம்.பி.யாக இருந்த சலுவரய்யாசாமியும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு, கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர். இதனால் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. 24 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மாண்டியாவில் ரம்யா

இதில் நடிகை ரம்யா, மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நடிகை ரம்யா பெயரை முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் கட்சி மேலிடத்துக்கு சிபாரிசு செய்தனர். இதை பரிசீலித்த மேலிடம் அவரை வேட்பாளராக இன்று அறிவித்துள்ளது.

குமாரசாமி மனைவி

பெங்களூர் புறநகர் எம்.பி. தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக டி.கே.சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து ஜனதாதளம் சார்பில் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியும், மாண்டியா தொகுதியில் நடிகை ரம்யாவை எதிர்த்து புட்டராஜூவும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

English summary
The Congress on Friday decided to field D K Suresh, brother of former Karnataka minister D K Shivakumar, from Bangalore Rural Parliamentary constituency, while Kannada actor Ramya is likely to enter the electoral battle for the party from the Mandya Lok Sabha segment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X