For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருத்து கணிப்பு: டெல்லி தேர்தலில் காங்.க்கு பெரும் பின்னடைவு! கெஜ்ரிவாலுக்கு செம ஆதரவு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் தற்போது நடைபெற்றால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்றும் அர்விந்த் கெஜ்ரிவால் கட்சி 9 இடங்களைக் கைப்பற்றும் என்றும் இந்தியா டுடே- சிவோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டசபைக்கு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் தற்போது ஆகஸ்ட் மாதம் நடைபெற்றால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையில் காங்கிரஸ் 28, பாஜக 28, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 9 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற இடங்களில் 15 ஐ இம்முறை இழக்க நேரிடும் என்றும் அதே நேரத்தில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். எஞ்சிய காங்கிரஸ் தொகுதிகளை கெஜ்ரிவால் கட்சி கைப்பற்றிவிடும்.

இதனால் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது என்பது கேள்விக்குறியாகக் கூடும் எனத் தெரிகிறது.

Congress-BJP tie in Delhi with nine seats for AAP

யார் முதல்வர்?

டெல்லியில் யார் முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர் என்ற கேள்விக்கு தற்போதைய முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு 40% ஆதரவு கிடைத்துள்ளது. அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 21%, பாஜகவின் விஜய் கோயலுக்கு 12% ஆதரவும் கிடைத்திருக்கிறது.

English summary
Delhi will go to both the Congress and the BJP in the assembly polls if elections are held now, revealed an India Today-CVoter Mood of the Nation study.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X