For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீர்மூழ்கி வெடித்துச் சிதறியதற்கு ஏவுகணைகள் வெடித்ததே காரணம்?!

By Chakra
Google Oneindia Tamil News

மும்பை: மும்பை கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் சிந்துரக்சக் நீர்மூழிகிக் கப்பலில் நடந்தது தீ விபத்தா அல்லது வெடி விபத்தா அல்லது சதிச் செயலா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த நீர்மூழ்கியின் பேட்டரிகள் வைக்கும் பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து ஏவுகணைகள் இருந்த பகுதியிலும் வெடி விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் ஏவுகணைகள் வெடித்துச் சிதறியதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், இதை கடற்படை உறுதி செய்யவில்லை.

இந்த நீர்மூழ்கியில் இருந்த 3 அதிகாரிகள் உள்ளிட்ட 18 வீரர்களில் 5 பேரின் உடல்கள் மட்டுமே இன்று காலை வரை மீட்கப்பட்டுள்ளன. இதனால் மற்ற 13 பேரும் கூட உயிரிழந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.

இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து நீர்மூழ்கியே கடலுக்குள் மூழ்கிவிட்டது. இந்த நீர்மூழ்கிக்குள் கடற்படையின் டைவர்கள் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்முழ்கியில் உள்ள நீரை வெளியேற்றி அதை மீண்டும் மிதக்கச் செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

Fire or explosion? Submarine mishap cause being investigated

பேட்டரிகளை சார்ஜ் செய்யும்போது வெளியாகும் ஹைட்ரஜன் வாயுயை வெளியேற்றும் கருவிகள் செயல்படாமல் போனதால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதையடுத்து நீர்மூழ்கியின் ஏவுகணைகள், கடலடி ஏவுகணைகள் (torpedoes) வெடித்துச் சிதறியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மேலும் சம்பவம் நடந்தபோது அந்த நீர்மூழ்கியில் ஏவுகணைகள் பொறுத்தப்பட்டுக் கொண்டிருந்ததாகவும், அப்போது நடந்த ஏதோ தவறு காரணமாகவே வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.

நீர்மூழ்கியைச் சுற்றி சிதறிய ஏவுகணை பாகங்கள் கிடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மனிதத் தவறால் இந்த விபத்து நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

English summary
The Indian navy is looking at whether mistakes were made loading missiles onto a submarine which sank after two huge explosions and a fire. The 18 sailors trapped on the sub after Wednesday's incident are feared dead but divers continued to explore the vessel overnight amid faint hope some could have survived in an air pocket. Rescuers are yet to find any signs of life, nor have they found any bodies. Their job has been more difficult after fire melted parts of the submarine and deformed access hatches.Water is being pumped from the flooded INS Sindhurakshak to try to refloat the vessel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X