For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

unfriend, lol, dude, babe...அட, இதெல்லாம் ரொம்ம்ம்..ப பழைய வார்த்தைங்களாம்...

Google Oneindia Tamil News

லண்டன் பேஸ்புக்கில் ஒருவரை நமக்குப் பிடிக்காவிட்டால் அன்பிரண்ட் unfriend செய்யலாம். ஆனால் இந்தப் பதம் பேஸ்புக் வந்ததிற்குப் பிறகுதான் வந்தது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.. ஆனால் 1275ம் ஆண்டிலேயே இந்த அன்பிரண்ட் அமலில் இருந்துள்ளதாம்.

மார்க் ஜுகர்பர்க்தான் இந்த அன்பிரண்ட் என்ற பதத்தை அறிமுகப்படுத்தியவர் என்ற வாதத்திற்கு அணுகுண்டு வைப்பது போல உள்ளது இந்தப் புதிய தகவல்.

மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது இதைப் படிக்கும்போது. வாங்க, அந்த வரலாற்றுப் பின்னணிக்குப் போய் விட்டு வருவோம்.

டிவிட்டர்- பேஸ்புக் வார்த்தைகள்

டிவிட்டர்- பேஸ்புக் வார்த்தைகள்

எஸ்.எம்.எஸ்., டிவிட்டர், பேஸ்புக் போன்றவை வந்த பிறகு பல புதிய வார்த்தைகளை உலகம் அறியத் தொடங்கியது. அதில் ஒன்றுதான் இந்த பிரண்ட்- அன்பிரண்ட்.

பேஸ்புக்கில் அறிமுகம்

பேஸ்புக்கில் அறிமுகம்

ஒருவரைப் பிடித்திருந்தால் அல்லது அவருடன் நட்பு வைக்க விரும்பினால் பிரண்ட்ஸ் ரெக்வஸ்ட் கொடுத்து அவரை நண்பராக்கிக் கொள்வது, அவரைப் பிடிக்காவிட்டால், அல்லது விலக நினைத்தால் அன்பிரண்ட் கொடுத்து ஒதுங்கிக் கொள்வது ஆகியவற்றை பேஸ்புக்கில் அறிமுகம் செய்தனர்.

ஆனா இது புதுசில்லையே

ஆனா இது புதுசில்லையே

ஆனால் இந்த அன்பிரண்ட் என்ற பதமானது புதிதில்லையாம். சில நூற்றாண்டுகளாக இருந்து வரும் வார்த்தையாம்.

முதல்ல நெளன்

முதல்ல நெளன்

அதாவது 1275ம் ஆண்டு இந்த வார்த்தையானது நெளன் அதாவது பெயர்ச் சொல்லாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பின்னர் இது 1659ம் ஆண்டு வெர்ப் அதாவது வினைச்சொல்லாக கையாளப்பட்டு வந்துள்ளது.

சிமோன்தாமஸ் சொல்கிறார்

சிமோன்தாமஸ் சொல்கிறார்

இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் பிளாக் எடிட்டரான சிமோன் தாமஸ் கூறும்போது, இது 1275ம் ஆண்டில் பெயர்ச் சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் 1659ம் ஆண்டில் வினைச் சொல்லாக இருந்துள்ளது என்றார்.

புத்துயிர் கொடுத்த வால்ட்டர் ஸ்காட்

புத்துயிர் கொடுத்த வால்ட்டர் ஸ்காட்

பிரபல ஸ்டாக்லாந்து எழுத்தாளரான வால்ட்டர் ஸ்காட்தான் இந்த வார்த்தைக்குப் புத்துயிர் கொடுத்தவர். இவர்தான் 19ம் நூற்றாண்டில் இதைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.

தாமஸ் புல்லர் பயன்படுத்தினார்

தாமஸ் புல்லர் பயன்படுத்தினார்

1659ம் ஆண்டு தாமஸ் புல்லர் என்ற இங்கிலாந்து மதத் தலைவர் ஒரு குறிப்பில் எழுதுகையில், "I hope, sir, that we are not mutually un-friended by this difference which hath happened betwixt us." என்று குறிப்பிட்டுள்ளார்.

text

text" ம் கூட புதிதில்லை..

அதபோலத்தான் டெக்ஸ்ட் என்ற வார்த்தை. இதுவும் புதியதில்லையாம். மாறாக 1564ம் ஆண்டு முதல் இது புழக்கத்தில் இருந்து வருகிறதாம்.

1889ல் அமலுக்கு வந்த

1889ல் அமலுக்கு வந்த "lol"

அதேபோல "lots of love" என்பதன் சுருக்கமான "lol" என்ற வார்த்தை 1989ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறதாம். ஆனால் இதே "lol" 1960களிலேயே புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால் அப்போது அதற்கு "little old lady". என்று அர்த்தமாம்.

"dude", "babe" இதுவும் பழசுதான்...

அதேபோல இளைஞர்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள "dude", "babe" போன்ற வார்த்தைகளும் அறுதப் பழசான ஒன்றுதானாம். இவையெல்லாம் 1889ம் ஆண்டே புழக்கத்தில் இருந்தனவாம்.

சுவாரஸ்யமா இருக்குல்ல...

English summary
A few words which seem to be straight out of Facebook founder Mark Zuckerberg's slangbag have actually been around for the past couple of centuries. The word "unfriend", an option to dump a friend on social networking website Facebook by clicking a button, was first used as a noun as far back as 1275. Its usage as a verb dates back to 1659.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X