For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலக்கரி ஊழல்.. 189 ஆவணங்களை காணவில்லை- உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட மத்திய அரசு!

By Mathi
Google Oneindia Tamil News

Coalgate: 189 out of 236 documents sought by CBI not available, admits Centre
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் சிபிஐ கோரிய 189 ஆவணங்களை காணவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரத்தை சிபிஐ, உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ கோரும் ஆவணங்களை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் சிபிஐ கோரிய 236 ஆவணங்களில் பல மாயமாகிவிட்டது என்று மத்திய அரசு தெரிவித்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த நிலக்கரித் துறை அமைச்சர் ஜெய்ஸ்வால், 7 கோப்புகள்தான் காணாமல் போயிருக்கிறது என்று கூறியிருந்தார்.

ஆனால் நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, சிபிஐ கோரிய 236 ஆவணங்களில் 189 ஆவணங்கள் மாயமாகிவிட்டது என்று மத்திய அரசு ஒப்புக் கொண்டது.

மேலும் இந்த ஆவணங்களை ஒரு மாதத்திற்குள் தேடி கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு உறுதி அளித்து உள்ளது.

இந்த மாயமான கோப்புகள் மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.

English summary
The Centre on Tuesday admitted before the Supreme Court that 189 out of 236 documents sought by the CBI, which is probing coal block allocation scam, is ‘not-available’
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X