For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல்லவனில் ஏறினால் இனி திருச்சியையும் தாண்டி காரைக்குடி வரை போகலாம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையிலிருந்து திருச்சி வரை சென்று கொண்டிருக்கும் பல்லவன் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இனி காரைக்குடி வரை செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தத் தகவலை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தப் புதிய மாற்றம் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...

சென்னை எழும்பூரிலிருந்து

சென்னை எழும்பூரிலிருந்து

செப்டம்பர் 1-ந்தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து தினசரி பிற்பகல் 3.30 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்(12605) காரைக்குடி வரை செல்லும்.

காரைக்குடியிலிருந்து

காரைக்குடியிலிருந்து

அதைத் தொடர்ந்து செப்டம்பர் 2-ந்தேதி முதல் காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் (12606) தினசரி அதிகாலை 4.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும்.

திருச்சிக்கு இரவு 9.29 மணிக்கு

திருச்சிக்கு இரவு 9.29 மணிக்கு

சென்னை எழும்பூர்-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்(12605) தினமும் இரவு 9.20 மணிக்கு திருச்சியை சென்றடையும். பின்னர் அங்கிருந்து இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.12 மணிக்கு புதுக்கோட்டைக்கும், இரவு 11.25 மணிக்கு காரைக்குடிக்கும் சென்றடையும்.

அதிகாலை 4.30 க்கு காரைக்குடியிலிருந்து

அதிகாலை 4.30 க்கு காரைக்குடியிலிருந்து

மறுபாதையில் இயங்கும் காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 4.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 5.05 மணிக்கு புதுக்கோட்டையையும், காலை 6.15 மணிக்கு திருச்சியையும் சென்றடையும்.

திருச்சியிலிருந்து காலை 6.30 மணிக்கு

திருச்சியிலிருந்து காலை 6.30 மணிக்கு

பின்னர் திருச்சியில் இருந்து காலை 6.30 மணிக்கு சென்னை நோக்கி புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Chennai - Trichy Pallavan express train has been extended upto Karaikudi. Earlier this train was stopped at Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X