For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலமா சபை எதிர்ப்பு: இந்தோனேசியாவில் உலக அழகிப்போட்டி ரத்து?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஜகர்தா: பெண்களை கவர்ச்சிப் பொருளாக வெளிப்படுத்தும் உலக அழகிப் போட்டியை இந்தோனேசியாவில் நடத்தக் கூடாது என்று இஸ்லாமிய மதக்குருக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். வரும் செப்டம்பர் மாதம், இங்குள்ள பாலித்தீவில், உலக அழகி போட்டி நடக்க உள்ளது. 137 பேர் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.

இந்த மாதம் தொடக்கத்தில் இந்தோனேசியாவின் மிகவும் செல்வாக்கு உள்ள உலமா சபையின் இஸ்லாமிய மதக்குருக்களின் உயர் மட்டம் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், பெண்கள் தங்களின் தோலை காட்டி நடந்து வரும் இப்போட்டியானது இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், இப்போட்டியை இந்தோனேசியாவில் நடத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.

உலக அழகிப் போட்டி

உலக அழகிப் போட்டி

137 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்கும் உலக அழகிப் போட்டி அடுத்த மாதம் பாலி தீவில் நடைபெறுகிறது. ஆனால் இஸ்லாமிய மதக்குருக்கள் இப்போட்டியை இந்தோனேசியாவில் நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரத்து செய்யுங்கள்

ரத்து செய்யுங்கள்

பெண்கள் தங்களின் தோலை காட்டி நடந்து வரும் இப்போட்டியானது இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், இப்போட்டியை இந்தோனேசியாவில் நடத்தக்கூடாது. அரசு இப்போட்டியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

காகா கவர்ச்சி டான்ஸ்

காகா கவர்ச்சி டான்ஸ்

கடந்த ஆண்டு, பாப் இசை பாடகி, காகாவின் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. "அரை குறை ஆடையுடன் நடனமாடும் காகாவின் இசை நிகழ்ச்சி நடந்தால், அந்த மேடையை தீயிட்டு கொளுத்துவோம்' என, முஸ்லிம்கள் எச்சரித்ததால், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

நீச்சல் உடைக்கு நோ

நீச்சல் உடைக்கு நோ

உலக அழகி நடக்கும் போதெல்லாம், அதில் ஒரு பிரிவான, நீச்சல் உடைக்கான போட்டியும் நடக்கும். ""முஸ்லிம்களின் எதிர்ப்பு அதிகம் உள்ளதால், இந்த முறை நீச்சல் உடை பிரிவுக்கான நிகழ்ச்சி நடக்காது,'' என, உலக அழகி போட்டியின் ஏற்பாட்டாளர் ஜூலியா மோர்லி, லண்டனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

உலமா உத்தரவு

உலமா உத்தரவு

உலமா சபை விதித்துள்ள இந்த உத்தரவை மீறுவது பாவம் என்று இந்தோனேசிய மக்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர். புகைப்பிடித்தல் மற்றும் யோகாவிற்கு எதிராக பல முரண்பாடான உத்தரவுகளை ஏற்கனவே உலமா சபை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்போ அழகிப் போட்டி

அப்போ அழகிப் போட்டி

உலமா சபையின் எதிர்ப்பால் உலக அழகிப் போட்டி நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. அழகிப் போட்டி ஏற்பாட்டாளர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

English summary
Indonesia -- One of Indonesia's most influential Islamic groups is urging the government to cancel the Miss World pageant scheduled for next month, saying the exposure of skin by women in a competition violates Muslim teachings, an official said Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X