For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்துல் கரீம் துண்டா அளித்த தகவலை வைத்து யாசின் பட்கல் கைது

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 16ம் தேதி கைது செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துண்டா கொடுத்த தகவலை வைத்து இந்தியன் முஜாஹிதீன் நிறுவனர் யாசின் பட்கலை கைது செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

21 வழக்குகளில் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துண்டா கடந்த 16ம் தேதி இரவு இந்திய-நேபாள எல்லையில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் டெல்லி போலீசார், உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு நிறுவனத்தார் விசாரணை நடத்தினர்.

Tunda's clues help to nab Yasin Bhatkal

அந்த விசாரணையின்போது துண்டா அளித்த தகவலை வைத்து தான் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கலை கைது செய்துள்ளனர்.

பட்கலை கைது செய்ய டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு இந்திய-நேபாள எல்லையில் கடந்த ஒரு வாரமாக காத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பட்கலை தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் விசாரணைக்கு ஒப்படைக்கப் போவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பட்கல் மற்றும் துண்டாவை அருகருகே வைத்து விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

English summary
Lashkar-e Toiba man Abdul Karim Tunda's clues has reportedly helped the police and NIA to nab IM founder Yasin Bhatkal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X