For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக மாலுமிகளில் 7 சதவீதம் பேர் இந்தியர்கள் - ஜி.கே.வாசன் பெருமிதம்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: உலகத்தில் உள்ள மொத்த மாலுமிகளில் 7 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெருமை பொங்க கூறினார்.

தூத்துக்குடியில், கடல்சார் பயிற்சி நிறுவன துவக்க விழா நடைபெற்றது. அப்போது, 50 கோடி ரூபாயில் பயிற்சி மைய கட்டுமான பணிகளுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அடிக்கல் நாட்டி பேசுகையில்,

இந்த பயிற்சி மையத்தில் 40 மாணவர்கள் படிக்கும் வகையில், பயிற்சி மையம் துவக்கப்படும். பல்வேறு முக்கிய நுணுக்கங்களை உள்ளடக்கிய, பெரிய கப்பல்களை கையாளும் பயிற்சியை மாணவர்கள் பெற வேண்டும்.

உலகத்தில் உள்ள மொத்த மாலுமிகளில் 7 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இதை 9 சதவீதமாக உயர்த்தப்படும்.

கடல்சார் அறிவியல் பட்டப் படிப்பு, பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு புது அங்கீகாரம் வழங்கப்படும். மேலும், கடல்சார் கல்வி நிறுவனங்களை தர வரிசைப்படுத்தவும், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், கால அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.

மும்பை கடல்சார் கல்வி நிறுவனம், 1987 ம் வருடம் துவங்கப்பட்டது. இதில் சுமார் 1.5 லட்சம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இந்திய கப்பல் போக்குவரத்து கழக கப்பல்களில், தென்மாநில மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.

English summary
7 % of the sailors in the world are Indians, said union ministers G K Vasan in a function held at Tuticorin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X