For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆளில்லாத விண்கலம் ‘லாட்’: ஆய்வுக்காக சந்திரனுக்கு அனுப்பியது நாசா

Google Oneindia Tamil News

நியூயார்க்: சந்திரனினைக் குறித்து ஆய்வு செய்வதற்காக, நாசா சார்பில் ஆளில்லாத விண்கலம் ஒன்று, ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப் பட்டுள்ளது.

விண்வெளி குறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது நாசா. அந்த வகையில் தற்போது சந்திரனின் வான்வெளி குறித்தும், அதை சுற்றிலும் தூசுகள் மிதப்பது குறித்தும் தற்போது அமெரிக்காவின் 'நாசா' மைய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.

அந்தவகையில், சந்திரனைக் குறித்து ஆய்வு செய்யும் பொருட்டு நேற்று, ஆளில்லாத விண்கலம் ஒன்றை விண்ணிற்கு அனுப்பியுள்ளது நாசா.

லாட் விண்கலம்....

லாட் விண்கலம்....

நாசா சார்பில் சந்திரனைக் குறித்து ஆய்வு மேற்கொள்ள தயாரிக்கப் பட்ட ஆளில்லாத விண்கலத்தின் பெயர் 'லாட்'. அந்த விண்கலம் நேற்று விர்ஜீனியா விண்வெளி தளத்தில் இருந்து மின்போவர் வி.ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

கார் போன்ற வடிவில்....

கார் போன்ற வடிவில்....

லாட் விண்கலம் 'ரோபோ' மூலம் இயங்கும் சிறிய கார் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை கலிபோர்னியாவில் உள்ள நாசா அமெஸ் ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ் பீட்டர் வோர்டன் என்ற விஞ்ஞானி உருவாக்கியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆய்வு...

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆய்வு...

லாட் சந்திரனைச் சென்றடைய கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. தரை இறங்கிய உடன், தனது ஆய்வை 'லாட்' விண்கலம் தொடங்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

புகைப்படங்கள்....

புகைப்படங்கள்....

சந்திரனைக் குறித்து சேகரிக்கும் தகவல்களை அங்கிருந்த படியே, புகைப்படங்களாக பூமிக்கு அனுப்ப இருக்கிறது லாட்.

சந்திரனிலேயே சமாதி....

சந்திரனிலேயே சமாதி....

சுமார் ரூ.1900 கோடி செலவில் மேற்கொள்ளப் பட்டு வரும் இந்த ஆய்வின் காலம் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள். 6 மாத ஆய்வுக்கு பின் 'லாடீ' விண்கலம் சந்திரனிலேயே தனது வாழ்நாளை முடித்து கொள்ளும், பூமிக்கு திரும்பாது என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
NASA launched an unmanned spacecraft on Friday that aims to study the moon's atmosphere, the US space agency's third lunar probe in five years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X