For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டாத 4 மாநிலங்கள்: மத்திய அமைச்சர் ஆலோசனை

Google Oneindia Tamil News

கொரோனா பேரிடரில் அவசியமான தடுப்பூசியை செலுத்தி 3 வது அலை வராமல் தடுக்கும் முயற்சியில் மாநிலங்கள் முயற்சி எடுத்துவரும் சூழ்நிலையில் சில மாநிலங்கள் அலட்சியமாக இருந்துவருகின்றன. கொரோனா முதல் தவணை தடுப்பூசியை 70% குறைவாக செலுத்திய புதுச்சேரி, மணிப்பூர் உள்ளிட்ட மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

ஒபெக் நாடுகளுக்கு செக்.. கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த பைடன் அதிரடி.. இந்தியா நிலைப்பாடு என்ன?ஒபெக் நாடுகளுக்கு செக்.. கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த பைடன் அதிரடி.. இந்தியா நிலைப்பாடு என்ன?

பேரிடரை உருவாக்கிய கொரோனா

பேரிடரை உருவாக்கிய கொரோனா

கொரோனா முதல் அலை பரவலுக்கு பின் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு எடுத்த நடவடிக்கையாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இலவசமாக கொண்டுவரப்பட்டது. ஆனால் அதற்குள் இரண்டாம் அலை வேகமாக பரவியது. இதனால் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

3 ஆம் அலை பரவல் தடுத்து நிறுத்தம் ஆனாலும் முழுமையடையாத தடுப்பூசி பணி

3 ஆம் அலை பரவல் தடுத்து நிறுத்தம் ஆனாலும் முழுமையடையாத தடுப்பூசி பணி

அதில் இலக்கை எட்ட முடியாத அளவுக்கு பல தடைகள் இருந்தன. ஆனாலும் தொடர்ந்து மாநிலங்களில் எடுக்கப்பட்ட முயற்சியால் இரண்டாம் அலை குறைந்தது. 3 ஆம் அலை வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தடுப்பூசிகள் போடுவது அதிகரித்ததால் 3 ஆம் பரவல் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா முழுவதும் குறையாத நிலையும், தடுப்பூசி முழுவதுமாக போடப்படாத நிலையிலும் அதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

 100% கடந்த சிறிய மாநிலங்கள் சாதனை

100% கடந்த சிறிய மாநிலங்கள் சாதனை

இந்தியாவில் கொரனோ தடுப்பூசி செலுத்துவதில் இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மொத்த மக்கள் தொகையில் 100% பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திவிட்டனர். அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்கள் தங்களுடைய மாநில மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பு ஊசியை 100% என்ற அளவுக்கு செலுத்தியும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியை 40%-60% மேல் செலுத்தும் இலக்கை அடைந்து வருகிறார்கள்.

குறைந்த அளவிலான எண்ணிக்கை

குறைந்த அளவிலான எண்ணிக்கை

இந்நிலையில் மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் முதல் டோஸ் தடுப்பு ஊசியை செலுத்துவதில் 70% கீழ் உள்ளனர். மத்திய அரசின் தரவுகளின் படி புதுச்சேரி 65.7 சதவீதம், மேகாலயா 56.7 சதவீதம், மணிப்பூர் 54.2 சதவீதம், நாகாலாந்து 49 சதவீதம்என்ற அளவிலே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது.

 70% கடந்த தமிழகம்

70% கடந்த தமிழகம்

வாரந்தோறும் வார இறுதி நாட்களில் தடுப்பூசி முகாம்களை கட்டாயமாக்கி தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக சில வாரைறுதி நாட்களில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளால் நல்ல பலன் ஏற்பட்டுள்ளது. 70 % மக்களுக்கு மேல் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த முகாமுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டின் புள்ளி விவரத்தை தாண்டாத 4 மாநிலங்கள்

நாட்டின் புள்ளி விவரத்தை தாண்டாத 4 மாநிலங்கள்

நாட்டின் மொத்த புள்ளிவிவரங்கள் படி 18 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 81.5% பேர் முதல் டோஸ் செலுத்தி கொண்டு உள்ளனர். அதுபோல, கிட்டத்தட்ட 43% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்தி கொண்டு உள்ளனர். ஆனால், மொத்த மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100% முதல் டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை அடைவதில் குறிப்பிட்ட சில மாநிலங்களின் பங்களிப்பு குறைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

 புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்கள்

புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநிலங்கள்

நாட்டின் சராசரியை மட்டுமல்ல குறிப்பிட்ட இலக்கையும் அடையாத மாநிலங்களாக 4 மாநிலங்கள் உள்ளன. இவை அனைத்துமே சிறிய மாநிலங்கள் ஆகும். மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் ஆகும். இம்மாநில சுகாதாரதுறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியா காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இலக்கை எட்ட நடவடிக்கை

இலக்கை எட்ட நடவடிக்கை


இதில், தடுப்பூசியை இதுவரை செலுத்திய தரவுகள் குறித்தும், இனிவரும் நாட்களின் மாநிலத்தின் தடுப்பூசி செலுத்தும் வேகம் அதிகரிப்பது, கொரோனா பரவல் கட்டுப்படுத்தல் குறித்தும் ஆலோசிக்கபட்டது. மத்திய அரசின் இலக்கை விரைவில் எட்டுவதற்கான நடவடிக்கையை முடுக்கிவிடுவது குறித்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

English summary
4 states that have not reached the corona vaccine target: Union Minister advised
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X