அரியலூர் இறந்த மனைவிக்கு கோயில் .. முதலாம் ஆண்டு நினைவு நாளில் ஊரையே கண்ணீர் விட வைத்த கணவர்
அரியலூர்: அரியலூர் கோபாலகிருஷ்ணன் தன் மனைவி மீது அளவுக்கடந்த காதலை கொண்டிருக்கிறார்.. திடீரென மனைவி இறந்துபோன நிலையில், அவருக்காக கோவிலே கட்டியுள்ளார். இறந்த மனைவிக்கு கோவில் கட்டி அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் கும்பாபிஷேகம் நடத்தி நெகிழ வைத்துள்ளார்.
உலகத்தில் மிக புனிதமான உறவு கணவன் மனைவி உறவு தான். கணவனுக்கு மனைவியும், மனைவிக்காக கணவனும் வாழும் வாழ்க்கை இன்பம் மற்றும் துன்பங்களை அழகாக்குகிறது. தன்னை முழுமையாக புரிந்து கொண்டு தனக்காக வாழும் மனைவி கிடைக்க கணவன் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதேபோல் தான் தன்னை புரிந்து கொண்டு, தனக்காக வாழும் கணவன் கிடைக்கவும் மனைவி பாக்கியம் செய்திருக்கவேண்டும். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து மகிழ்ச்சியான வாழ்ந்த தம்பதிக்கு பெரிய சோகமே அவர்கள் பிரிந்து செல்வது தான். கணவனை இழந்த பெண்ணகள் குழந்தைகளுடன் வாழ்ந்துவிடுவார்கள்..

ஆனால் மனைவியை இழந்த கணவன், அன்றே அரை மனிதனாகிவிடுவான்.. இறுதி காலங்களில் தன் மனைவி தனக்கு முன்பு சென்றுவிட்டால், அதுதான் கணவன்களுக்கு பெரிய துன்பமாக இருக்கும். சாப்பாடு, சந்தோஷம், பேச்சு, சண்டை எதுவும் இல்லாமல் வாழ்க்கை வெறுமையாகிவிடும். அதனால் தான் நல்ல மனைவி அமைந்தால் கோவில் கட்டி கும்பிட வேண்டும் என்பார்கள். அதனை உறுதி செய்துள்ளார் அரியலூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் காந்தி நகரை சேர்ந்த 42 வயதாகும் கோபாலகிருஷ்ணன், திருப்பூரில் பின்னலாடை தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கற்பகவல்லி(36). இவர்களுக்கு தற்போது 5 வயதில் கோமகன் என்ற மகன் இருக்கிறார்.
கற்பகவல்லிக்கு 2 சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன்னுடைய காதல் மனைவியை காப்பாற்றுவதற்காக கோபாலகிருஷ்ணன் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்த்தார். பல லட்சம் ரூபாய் செலவு செய்தும் காப்பாற்ற முடியவில்லை..
இதனால் வேதனை அடைந்து கோபாலகிருஷ்ணன் போராட்டத்தை தொடர்ந்தார். காப்பாற்ற முடியாத நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு கற்பகவல்லி உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கத்திலும், மீளா துயரத்திலும் இருந்த கோபாலகிருஷ்ணன், தனது வீட்டின் அருகில் உள்ள சொந்த நிலத்திலேயே மனைவியை அடக்கம் செய்தார்.
பின்னர் கோபாலகிருஷ்ணனும் தன் மனைவி அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அவருக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தில் ரூ.15 லட்சம் செலவில் கோவில் ஒன்றை கட்டி, அதில் 3 அடி உயரத்தில் கற்பகவள்ளியை அம்மன் உருவத்தில் சிலை செய்து வைத்து நேற்று கும்பாபிஷேகம் நடத்தினார். இதனை பார்த்து மக்கள் நெகிழ்ந்து போனார்கள்.












Click it and Unblock the Notifications