அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நஞ்சைகளே புஞ்சைகளே.. சோழர் பாசன திட்டம்! அரியலூரில் நாளை களமிறங்கும் அன்புமணி! உற்சாகமான பாட்டாளிகள்!

Google Oneindia Tamil News

அரியலூர் : அரியலூர் - சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கீழப்பழுவூர் முதல் காட்டுமன்னார்கோயில் நாளை மற்றும் நாலை மறுநாள் நடைபயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியினர் உற்சாகமாக ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி காவேரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூன்று நாள் நடைபயணம் பிரச்சாரத்தை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒகேனக்கலில் தொடங்கினார். அதன்பிறகு நாமக்கல், உள்ளிட்ட பகுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிகளில் மக்களிடம் கிடைத்த வரவேற்பு , கட்சியினரிடையே ஏற்பட்ட உற்சாகம் ஆகியவை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக உள்ள அன்புமணி ராமதாஸை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக விவசாயிகளிடையே கிடைத்துள்ள வரவேற்பால் அவர் அடுத்த நீர்ப்பாசன திட்டங்களை கருத்தில் கொண்டு நடை பயண திட்டங்களை வகுத்து வருகிறார்.

அட்டூழியம்.. மத்திய அரசு கண்டிக்காதது தான் இலங்கையின் துணிச்சலுக்கு காரணம்.. எகிறி அடித்த அன்புமணி! அட்டூழியம்.. மத்திய அரசு கண்டிக்காதது தான் இலங்கையின் துணிச்சலுக்கு காரணம்.. எகிறி அடித்த அன்புமணி!

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அந்த வகையில் நாளை அரியலூர் - சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். நாளை காலை கீழப்பழூரில் காலை 9 மணிக்கு தொடங்கும் அன்புமணி ராமதாஸின் பயணம் கரைவெட்டி ஏரி, திருமானூர், குறுவாடி விக்கிரமங்கலம், வழியாக த.பழூர் பகுதியில் இரவு முடிவடைகிறது. நாளை மறுநாள் அரியலூரில் காலை 9 மணிக்கு தொடங்கும் அன்புமணி ராமதாஸ்-ன் நடைபயணம் வாலஜா நகரம், அஸ்தினாபுரம், தத்தனூர் ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி பகுதி வழியாக காட்டுமன்னார்கோவிலில் நிறைவடைகிறது.

 மக்களை சந்திக்க திட்டம்

மக்களை சந்திக்க திட்டம்

இந்த இரண்டு நாட்களிலும் அரியலூர் - சோழர் நீர் பாசன திட்டத்தை வலியுறுத்தி நடை பயணத்தின் போது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். இதற்கான ஏற்பாடுகளை பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் தற்போதையிலிருந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். திட்டத்தின் போது இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகளை சந்திக்கவும் அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டு இருக்கிறார், இதன் மூலம் அரியலூரில் பாமகவுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோழர் பாசன திட்டம்

சோழர் பாசன திட்டம்

குறிப்பாக சோழர் பாசன திட்டம் என்றால் என்ன என்பது குறித்து மக்களுக்கு விளக்கவே இந்த பயணம் என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். சோழர்கால சாதனைகளில் ஒன்றாக சோழகங்கம் எனப்படும் பொன்னேரி கங்கைகொண்ட சோழபுரத்தை சோழ நாட்டின் தலைநகரமாக உருவாக்கினார் ராஜேந்திர சோழன். கிபி 11 ஆம் நூற்றாண்டில் அப்பகுதியின் பாசன தேவைக்காக சோழகங்கம் ஏரி அமைக்கப்பட்டது. சுமார் 17 மைல் நீளமும் 3 மைல் அகலமும் கொண்ட இந்த ஏரி 2000 ஏக்கர் நீர் பாசனத்திற்கு ஆதாரமாக உள்ளது.

என்ன திட்டம்?

என்ன திட்டம்?

அப்போது கொள்ளிடம் வெள்ளாறு ஆறுகளில் இருந்தும் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர கால்வாய்கள் அமைக்கப்பட்டன. சோழ மன்னர்களின் தொலைநோக்கு மிக நீண்டதாக இருக்கும் நிலையில் பெரிய ஏரிகளின் உபரிகளுக்கு செல்லும் வகையில் இணைப்பு பாதைகளையும் உருவாக்கி இருந்தார்கள். அந்தத் திட்டத்தை மீண்டும் அரியலூர் மாவட்ட மக்களின் தேவைக்காக கொண்டு வருவது அரியலூர் சோழர் பாசன திட்டம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் திட்டத்தில் இன்றைய சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்து சோழர்கால பாசன கட்டளை மீட்டெடுக்க முடியும் எனவும் இதற்கு சில நூறு கோடிகள் செலவாகும்.

ஏற்பாடுகள் தீவிரம்

ஏற்பாடுகள் தீவிரம்

இந்நிலையில் மத்திய அரசின் நிதி உதவி பன்னாட்டு வங்கி கடன் ஆகியவற்றின் மூலம் இட்டு திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். இதனை கருத்தில் கொண்டே அரியலூர் மாவட்ட மக்கள் நலனுக்காக அரியலூர் சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அன்புமணி இராமதாஸ் இந்த நடை பயணத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் இதில் அரசியல் நிலைகளை கடந்து அனைத்து தலைப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

English summary
PMK leader Anbumani Ramadoss is going to walk from Geezhapappuvur to Kattumannar kovil tomorrow and the day after tomorrow for ariyalur - cholar irrigation project, while the Pattali makkal katchi is making preparations enthusiastically.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X