அரியலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரியலூர் மாணவி மரணம்.. பாஜகவை ஒதுக்கி தள்ளிய மைக்கேல்பட்டி! தோல்வி அடைந்த வியூகம்! திமுக மாஸ் வெற்றி

Google Oneindia Tamil News

அரியலூர்: அரியலூர் மாணவி மரணம் காரணமாக கொதிப்பாக இருந்த மைக்கேல்பட்டி பகுதியை உள்ளடக்கிய பேரூராட்சியில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.

அரியலூர் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கு வார்டன் வேலை வாங்கி தொல்லை கொடுத்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. அதே சமயம் இவரின் மரணத்திற்கு மத மாற்ற காரணம் இருப்பதாகவும் பாஜக புகார் வைக்கிறது.

சிபிஐ அமைப்பு இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த மரணம் விவாதத்தை ஏற்படுத்தியது.

டரியல் பாஜக.. திமுகவுக்கு மாற்று அதிமுகதான்.. சொல்லி அடித்த ரிசல்ட்.. மலராமலே டரியல் பாஜக.. திமுகவுக்கு மாற்று அதிமுகதான்.. சொல்லி அடித்த ரிசல்ட்.. மலராமலே

மைக்கேல்பட்டி

மைக்கேல்பட்டி

இதனால் மைக்கேல்பட்டி மிகவும் கொதிப்பாக காணப்பட்டது. மத மாற்ற புகார் காரணமாக இந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. அதோடு இப்பகுதிக்கு பாஜக தலைவர்கள் நேரடியாக வந்து பார்வையிட்டு சென்றனர். அது மட்டுமின்றி பாஜக சார்பாக மறைந்த மாணவி குடும்பத்திற்கு பாஜக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலை மாணவி வீட்டிற்கு சென்று மாணவி படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து குடும்பத்தினரிடம் நிதி வழங்கினர்.

பாஜக

பாஜக

தமிழ்நாட்டில் பாஜக இதை மிகப்பெரிய அரசியல் நிலைப்பாடாகவும் எடுத்தது. முக்கியமாக பாஜக தனித்து போட்டியிடும் நிலையில் இந்த விவகாரம் அந்த கட்சிக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும். அரசியல் ரீதியான மைலேஜை கொடுக்கும் என்றே அக்கட்சி கருதியது. அதோடு இந்த விவகாரத்தை தேசிய அளவில் பாஜக கொண்டு சென்றது. ஆர்எஸ்எஸ் மாணவ ஏபிவிபி டெல்லியில் போராடும் அளவிற்கு நிலைமை சென்றது.

தோல்வி

தோல்வி

தமிழ்நாடு பாஜக இந்த பிரச்னையை தேசிய அளவில் கொண்டு சென்ற நிலையில் வழக்கும் மதுரை ஹைகோர்ட் கிளை மூலம் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் மைக்கேல்பட்டி இருக்கும் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் பாஜக கால் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு பாஜகவை மக்கள் புறக்கணித்து உள்ளனர். மைக்கேல்பட்டி உள்ள திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

மக்கள் எதிர்ப்பு

மக்கள் எதிர்ப்பு

இங்கு முன்னதாக மத ரீதியான மோதல்கள் நடக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்து இருந்தனர். ஒன்றாக சேர்ந்து சென்ற மக்கள், நாங்கள் மத ரீதியாக ஒற்றுமையாக இருக்கிறோம். எங்கள் ஒற்றுமையை குலைக்க பார்க்கிறார்கள். எங்களை இடையே பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறார்கள் என்று இப்பகுதி மக்கள் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

திருக்காட்டுபள்ளி பேரூராட்சி

திருக்காட்டுபள்ளி பேரூராட்சி

இங்கு திருக்காட்டுபள்ளி பேரூராட்சியை மொத்தமாக திமுக கைப்பற்றியது உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இங்கு திமுக வார்டுகளை வென்றுள்ளது. அதிமுக ஒரு வார்டை கூட வெல்லவில்லை. மாறாக அமமுக 2 வார்டுகளை வென்றுள்ளது. சுயேட்சைகள் 2 இடங்களில் வென்றுள்ளனர்.

English summary
Tamilnadu Urban Body election result: BJP loses very badly in Michael Patti in Thanjavur which saw ariyalur student case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X