Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டி20 டாஸ்க்.. கர்நாடகா தேர்தலுக்கு அமித்ஷா ‛மெகாபிளான்’.. ‛கை’யை வீழ்த்தி ‛தாமரை’ மலர கில்லாடி வேலை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள கர்நாடகா சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி பயமுறுத்தும் வகையில் உள்ள நிலையில் பாஜக மேற்கொண்ட கட்சி சர்வேயில் 20 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு மாறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அந்த தொகுதகளில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் டி20 டாஸ்க் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கையில் எடுத்துள்ளார். இது பாஜகவுக்கு நன்கு கைக்கொடுக்கும் என அவர் நம்பும் நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இந்நிலையில் தான் அமித்ஷாவின் டி20 டாஸ்க் பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு பாஜக, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்), ஆம்ஆத்மி கட்சிகள் தயாராகி வருகின்றன.

2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை வீழ்த்தி செல்வாக்கை நிரூபிக்க திட்டமிட்டு தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது.

பாஜகவுக்கு 20 தொகுதிகளில் பின்னடைவு?

பாஜகவுக்கு 20 தொகுதிகளில் பின்னடைவு?

மேலும் கர்நாடகாவில் கிடைக்கும் வெற்றி என்பது பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு அண்டை மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தலில் உத்வேகம் கொடுக்கலாம். இதனால் தான் இருகட்சிகளும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. இருகட்சிகளும் கூட தொகுதி வாரியாக களஆய்வு செய்து வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளது. பாஜகவை பொறுத்தமட்டில் கட்சி சார்பில் தொகுதி வாரியாக சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பாஜகவுக்கு 117 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் வரும் தேர்தலில் 20 தொகுதிகளில் பின்னடைவை சந்திக்கலாம் என அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சரிவை சந்தித்தால் என்ன நடக்கும்?

சரிவை சந்தித்தால் என்ன நடக்கும்?

கர்நாடகாவில் ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு 113 எம்எல்ஏக்கள் வேண்டும் என்ற நிலையில் சர்வே முடிவு என்பது பாஜகவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இது நடக்கும் பட்சத்தில் பாஜகவால் மீண்டும் தனித்து ஆட்சியை பிடிக்க முடியாது. மாறாக ஜனாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி அல்லது பிற கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை அணி மாற செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.

அமித்ஷாவின் டி20 வியூகம்

அமித்ஷாவின் டி20 வியூகம்

ஆனால் பாஜக அதனை விரும்பவில்லை. எப்படியாவது தனித்து கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட தொடங்கி உள்ளது. குறிப்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் ஆகியோர் தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதில் பிஎல் சந்தோஷ் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய வியூகம் வகுத்துள்ளார். இதுதொடர்பாக கர்நாடகா பாஜக தலைவர்களுக்கு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இது 20+20 டாஸ்க் என சொல்லப்படுகிறது.

டி20 டாஸ்க் என்ன?

டி20 டாஸ்க் என்ன?

அதாவது கர்நாடகா தேர்தலில் உறுதியாக வெற்றி பெறும் 20 முக்கிய தலைவர்களின் விபரங்களை அமித்ஷா கேட்டுள்ளார். விரைவில் அவர் கர்நாடகா செல்ல உள்ள நிலையில் இந்த பட்டியல் அவரிடம் வழங்கப்பட உள்ளது. இந்த பட்டியலில் இடம்பிடிக்கும் தலைவர்கள் தேர்தல் வேளையில் தங்கள் தொகுதி மட்டுமின்றி இன்னொரு தொகுதியிலும் கட்சி வெற்றிக்காக தீவிரமாக செயல்பட வேண்டும். அதாவது கட்சியின் சர்வேயில் வெற்றி வாய்ப்பு குறைவு மற்றும் இழுபறி உள்ள 20 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அந்த தொகுதிகளில் பட்டியலில் இடம்பிடித்த தலைவர்கள் பொறுப்பாளர்கள் போல் செயல்பட்டு தாமரை சின்னத்தின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இது பாஜகவுக்கு பலன் தரும் என அமித்ஷா நம்புகிறார்.

பைனல் எப்போது?

பைனல் எப்போது?

மேலும் ஜனவரி கடைசி வாரத்தில் அமித்ஷா கர்நாடகா செல்ல உள்ள நிலையில் அங்கு மாநில தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு டி20 டாஸ்க் அடிப்படையில் 20 தலைவர்களுக்கு 1+1 என்ற பார்முலாவில் அவர்கள் போட்டியிடும் தொகுதி + மற்றொரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+