வெஸ்டர்ன் ஸ்டைலில் ப்ரொபோஸ்.. பெங்களூரில் காதலனுக்கு ஷாக் கொடுத்த காதலி! வெளியாகும் பகீர் வீடியோ
பெங்களூர்: பெங்களூரு அஞ்சனாபுராவில் காதலனை வெஸ்டர்ன் ஸ்டைலில் ப்ரொபோஸ் செய்வதாகக் கூறி, கட்டி வைத்து எரித்துக் கொன்ற கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை காதலி தனது செல்போனில் பதிவு செய்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், விரைவில் வீடியோ வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.
காதலை தெரிவிப்பது என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். எனவே காதலர்கள் வித விதமாக ப்ரொபோஸ் செய்கிறார்கள். இப்படி பெங்களூர் இளைஞர் ஒருவர் தனது காதலி ப்ரொபோஸ் செய்வதாக நம்பி சென்றபோது, நடக்கக்கூடாதது நடந்திருக்கிறது.

காதல் கதை
வழக்கமாக ஒருவர் மீது அளவு கடந்த அன்பு இருக்கிறது எனில், அதை நம்மை அறியாமலேயே நாம் வெளிப்படுத்திவிடுவோம். அப்படித்தான் கிரணும் செய்திருக்கிறார். பிரேக் போகும்போது ஒன்றாக போவது, காபி வேண்டுமா டீ வேண்டுமா? என்று கேட்டு கெட்டு கவனிப்பது, பிரேமாவுக்கு சின்ன பிரச்சனை வந்தாலும் சட்டென முன் வந்து நிற்பது. இப்படி காதல் ரெக்கை கட்டி பறந்திருக்கிறது.
கண்டுக்கொள்ளாத காதலி
ஆனால், எதிர் தரப்பிலிருந்து சரியான ரெஸ்பான்ஸ் வரவில்லை எனில்.. அன்பு கோபமாக மாறிவிடும். இந்த கோபம்தான் பெண்களுக்கு எதிரான பல குற்றங்களுக்கு காரணமாகி விடுகிறது. கிரண் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. பிரேமாவிடம் ரெஸ்பான்ஸ் இல்லை என்பதை உணர்ந்த கிரண், அவரை கண்டுக்கொள்ளாமல் விட்டிருக்கிறார். எப்படி போனால் எனக்கு என்ன? என்று பிரேமா விஷயத்தில் கிரண் சைலன்ட் ஆகிவிட்டிருக்கிறார். இது பிரேமாவை ஆத்திரமடைய செய்திருக்கிறது.
பிரேமாவின் சம்பவம்
இதுதான் சம்பவத்திற்கான முதல் புள்ளி. அடுத்தடுத்த நாட்களில், பிரேமாவை தவிர்த்து மற்றவர்களுக்கு கிரண் முக்கியத்துவம் கொடுக்கவே, டென்ஷனான பிரேமா, கிரண் கதையை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்.
பிளான் மிக கச்சிதமாக போடப்பட்டிருக்கிறது. ஏப்.21 அன்று பிரேமா, கிரணை தன்னுடைய வீட்டிற்கு அழைத்திருக்கிறார். அங்கு வைத்து ப்ரொபோஸ் செய்வதாக கூறியிருக்கிறார். அடடே இத்தனை நாட்களாக உருகியும் காதலிக்காதவள், திடீரென ப்ரொபோஸ் செய்ய தன்னை வீட்டிற்கு அழைத்து அழைத்திருக்கிறாளே என கிரண் திக்குமுக்காடியுள்ளார். காதல் கண்களை மறைத்துவிட்டது.
வெஸ்டர்ன் ஸ்டைலில் ப்ரொபோஸ்
எனவே சொன்ன நேரத்தில் மாப்பிள்ளை கணக்காக ரெடியாகி, பிரேமா வீட்டிற்கு சென்றிருக்கிறார் கிரண். அதன் பின்னர் நடந்த சம்பவம்தான் மொத்த பெங்களூரையும் உலுக்கியிருக்கிறது.
அதாவது, லவ் ப்ரொபோஸ் என்பது மறக்க முடியாத தருணம். அதனால் வெஸ்டர்ன் ஸ்டைலில் ப்ரொபோஸ் செய்யப்போகிறேன் என்று பிரேமா சொல்ல.. கிரணும் நம்பியிருக்கிறார். பின்னர் கிரணின் கை கால்கள் துணியால் கட்டப்பட்டிருக்கிறது. ஏன் இப்படி செய்கிறாய்? என்று கேட்டதற்கு.. வெஸ்டர்ன் ஸ்டைலில் ப்ரொபோஸ் இப்படித்தான் இருக்கும் என்று நம்ப வைத்திருக்கிறார் பிரேமா.
கச்சிதமான பிளான்
கிரணின் கை, கால்கள், வாய், கண்கள் என அனைத்தையும் கட்டி முடித்த பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத கிரண், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
பிரேமாவின் வீட்டிலிருந்து திடீரென புகையும், அலறல் சத்தமும் கேட்டுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கதவை தட்டியிருக்கின்றனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. எனவே உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர். அங்கு கிரண் துடித்துக்கொண்டிருந்தார். அவரை காப்பாற்ற அவர்கள் முயன்றிருக்கின்றனர். ஆனால், முயற்சி பலனளிக்கவில்லை.
வீடியோ பதிவு
இதனையடுத்து அங்கிருந்த மக்கள் உடனடியாகப் பேடரஹள்ளி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது, கிரணின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததும், அவர் கண்கள் துணியால் மறைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இது ஒரு தற்செயலான விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், பிரேமா தனது மொபைல் போனில் இந்தக் காட்சிகளைப் படம்பிடிக்க முயன்றாரா என்பதைக் கண்டறிய, அவரது போனை போலீசார் பறிமுதல் செய்து தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
ஒருவேளை வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தால், அது விரைவில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. காதல் ப்ரொபோசல் என்னதான் மறக்க முடியாத தருணமாக இருந்தாலும்.. சிலருக்கு அதுவே வாழ்வின் கடைசி தருணமாக அமைந்துவிடுகிறது.












Click it and Unblock the Notifications