35 வயது வேலைக்கார பெண் வீட்டு கட்டிலில் ஹார்ட் அட்டாக்.. பரிதாபமாக பலியான 67 வயது மாஜி அரசு அதிகாரி
பெங்களூர்: தன்னுடன் உடலுறவு கொண்ட போது திடீர் 'ஹார்ட் அட்காக்' வந்து உயிரிழந்த கள்ளக்காதலனின் உடலை, கணவனுடன் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் சாலையோரம் வீசிச் சென்ற பெண்ணை பெங்களூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிளாஸ்டிக் பையால் மூடப்பட்டு சாலையோரத்தில் கிடந்த உடலை கடந்த வாரம் கைப்பற்றிய போலீஸார், இதுதொடர்பாக துப்பு துலக்கி வந்ததில் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது.
உண்மையிலேயே அந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு தான் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டு பணிப்பெண்ணுடன் கள்ளக்காதல்..
பெங்களூரில் உள்ள புட்டேனஹல்லியில் உள்ள ஜேபி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (67). ஓய்வுபெற்று அரசு அதிகாரியான இவர் தனது மனைவி, மகன் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது வீட்டில் வேலை செய்யும் கவிதா (35) என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. கவிதா வீட்டில் அவரது கணவர் இல்லாத சமயத்தில், பாலசுப்பிரமணியன் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று உல்லாசம் அனுபவிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவர்களின் இந்த கள்ளக்காதல் விவகாரம் இருவரின் வீட்டுக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

உடலுறவின் போது மாரடைப்பு..
இதனிடையே, கடந்த 16-ம் தேதி மாலை தனது பேரனை டென்னிஸ் வகுப்பில் விடுவதற்காக பாலசுப்பிரமணியன் சென்றுள்ளார். அதன் பிறகு, யாருக்கும் தெரியாமல் கவிதாவின் வீட்டுக்கு அவர் சென்றிருக்கிறார். அங்கு வழக்கம் போல இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், உடலுறவில் ஈடுபடும் போது பாலசுப்பிரமணியனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே இறந்துவிட்டார். இதனால் பயந்துபோன கவிதா, என்ன செய்வதென்று தெரியாமல் பதறிப் போயிருக்கிறார். பின்னர் வேறு வழியே இல்லாமல், நடந்த விஷயத்தை தனது கணவர் ரமேஷிடம் கவிதா கூறியுள்ளார்.

கணவனுடன் சேர்ந்து..
பின்னர் வீட்டுக்கு வந்த ரமேஷ், கோபத்தில் கவிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து, போலீஸுக்கு தெரிந்துவிட்டால் தனது மானம் போய்விடுமே என பயந்த ரமேஷ், மனைவி கவிதாவின் உதவியுடன் பாலசுப்பிரமணியனின் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி, தள்ளுவண்டி மூலம் வேறு பகுதிக்கு சென்று அங்குள்ள சாலையோர புதரில் வீசிவிட்டு வந்திருக்கிறார். இதனிடையே, பாலசுப்பிரமணியன் மாயமானதால் அவரது குடும்பத்தினரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த சமயத்தில்தான், மூன்று நாட்களுக்கு பிறகு சாலையோரத்தில் ஒரு உடல் கிடக்கிறது என்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்துள்ளது.

கள்ளக்காதலியும், கணவனும் கைது..
இதன்பேரில், அந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீஸார் அது பாலசுப்பிரமணியன் என்பதை உறுதி செய்தனர். பின்னர் அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது, வீட்டுப் பணிப்பெண் கவிதா 2 நாட்களாக வரவில்லை என்ற விஷயம் தெரியவரவே, போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து, கவிதாவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், நடந்த அனைத்தையும் அவர் போலீஸாரிடம் தெரிவித்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கவிதாவையும், அவரது கணவர் ரமேஷையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், பாலசுப்பிரமணியனின் உடலை பிரேதப் பரிசோதனைக்கும் போலீஸார் அனுப்பி வைத்தனர். பிரேதப்பரிசோனை அறிக்கையின் முடிவில் தான், பாலசுப்பிரமணியன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற காரணம் தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications