பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

“காவி கொடியுடன் பாரதமாதா” - ஹிஜாப் தடை செய்யப்பட்ட கர்நாடக பல்கலையில் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பு பூஜை

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் தடை விதிக்கப்பட்ட மங்களூரு பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பில் பாரத மாதா பூஜை நடத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு PU கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் ஒரு மாதத்துக்கும் மேலாக வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டனர். கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியக்கூடாது என்றும் சீருடையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது.

அதனை அடிப்படையாக கொண்டே தொடர்ந்து மாணவிகளை அனுமதிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்தது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர். ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடகா உட்பட நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்தன. பல இடங்களில் வன்முறையும் வெடித்தது.

பீகார்:7 கட்சிகளின் 164 எம்எல்ஏக்கள் ஆதரவு-ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிதிஷ்குமார் அறிவிப்புபீகார்:7 கட்சிகளின் 164 எம்எல்ஏக்கள் ஆதரவு-ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிதிஷ்குமார் அறிவிப்பு

கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இதனிடையே உடுப்பி மாணவிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

மங்களூரு பல்கலைக்கழகம்

மங்களூரு பல்கலைக்கழகம்

இதனை தொடர்ந்து இந்த கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் வெளியேற்றப்பட்டனர். பல கல்வி நிறுவனங்களில் அவர் நீக்கப்பட்டனர். இதேபோல், கர்நாடகாவில் உள்ள மங்களூரு பல்கலைக்கழகத்திலும் ஹிஜாப் அணிந்து வர மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டன. இதனை மீறி ஹிஜாப் அணிந்து வந்த ஒரு மாணவி கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார்.

மாணவர் அமைப்பு

மாணவர் அமைப்பு

இந்த நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக போஸ்டர் ஒன்று வெளியானது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி தலைமையில் நடத்தப்படும் இயங்கும் மாணவர் அமைப்பு நடத்தும் இந்த நிகழ்ச்சிகள் கடந்த 6 ஆம் ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பாரத மாதா பூஜை

பாரத மாதா பூஜை

6 ஆம் தேதி பல்கலைக்கழக பிரீமியர் லீக் விளையாட்டுப் போட்டிகளும், 12 ஆம் தேதி விளையாட்டு தினமும், 13 ஆம் தேதி பண்பாட்டு தினமும், 17 ஆம் தேதி கலை தினமும், 18 ஆம் தேதி கல்லூரி தின விழாவும் நடைபெறுகின்றனர். இதில், இதில் நாளை பாரத மாதா பூஜை தினம் கொண்டாடப்படுகிறது. பொதுவாக பாரத மாதா கையில் தேசிய கொடி இருப்பதைபோன்ற படம் பகிரப்படும் நிலையில், ஏபிவிபி வெளியிட்டுள்ள போஸ்டரில் பாரத மாதா கையில் காவிக்கொடி வைத்திருப்பதும் அதன் பின்னால் காவி நிறத்தில் அகண்ட பாரத மேப் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
Bharata mata pooja in Mangalore university where hijab banned:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X