சபாஷ்.. இதுதாங்க முன்னுதாரணம்.. பீகாரில் பாஜகவை கழற்றிவிட்ட நிதிஷ் குமார்.. புகழ்ந்த சித்தராமையா!
பெங்களூர்: பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறி ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து மீண்டும் முதல்வராகி உள்ளார். இந்நிலையில் பாஜக எதிர்ப்பு அரசியலுக்கு பீகார் தான் முன்னுதாரணம் எனக்கூறி கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையாக புகழ்ந்து பேசியுள்ளார்.
பீகாரில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அதாவது பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. நிதிஷ் குமார் முதல் அமைச்சராக இருந்தார்.
இந்நிலையில் தான் சமீப காலமாக பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. பாஜக தலைவர்கள் நேரிடையாக நிதிஷ் குமாரை விமர்சித்தனர். இதனால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்தார்.

முறிந்தது பாஜக கூட்டணி ஆட்சி
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நிதிஷ் குமார் புறக்கணித்து வந்தார். இதற்கிடையே தான் நேற்று முன்தினம் நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளியேறினார். இதன்மூலம் கடந்த 2 ஆண்டுகளாக பீகாரில் நடந்து வந்த பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கூட்டணி மாறி முதல்வரான நிதிஷ்
இதன் தொடர்ச்சியாக நிதிஷ் குமார், பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். மேலும் பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமார் 8 வது முறையாக முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார்.

பாஜக விமர்சனம்.. எதிர்க்கட்சிகள் வரவேற்பு
நிதிஷ் குமாரின் இத்தகைய செயலை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மாநிலத்தில் பாஜகவுக்க 77 எம்எல்ஏக்கள் இருந்தாலும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 45 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில் முதல்வர் பதவி நிதிஷ் குமாருக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் பாஜகவுக்கு துரோகம் செய்துவிட்டார் என பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேநேரத்தில் பல மாநிலங்களில் குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவுக்கு நிதிஷ் குமார் பாடம் கற்பித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் பாராட்டி வருகின்றனர். மேலும் பாஜகவை ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் வெளியேற்ற மாநில கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

சித்தராமையா கருத்து
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தற்போதைய பலம் 242 ஆக உள்ளது. ஆட்சியமைக்க 122 பேரின் ஆதரவு தேவை. இதில் ராஷ்டிரிய ஜனதாதளத்துக்கு 79, பாஜகவுக்கு 77, ஐக்கிய ஜனதாதளத்துக்கு ஐக்கிய ஜனதாதளம் 45, காங்கிரசுக்கு 19, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதுதவிர இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்க்கு 12 , இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவுக்கு 4 ஏஐஎம்ஐஎம் கட்சி மற்றும் சுயேச்சைக்கு தலா ஒரு எம்எல்ஏக்கள் உள்ளன.

சித்தராமையா கருத்து
இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா பீகார் அரசியல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பீகாரில் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சித்தராமையா, பாஜகவை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

பாஜகவின் மிரட்டல் அரசியல்
பீகார் முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார் மற்றும் துணை முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். பாஜகவின் மிரட்டல் அரசியல் நீண்டகாலம் நீடிக்காது என்பதற்கு பீகார் ஒரு உதாரணம். நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், மக்களின் தீர்ப்பை மதிக்கவும் நேரம் வந்துவிட்டது.

முன்னுதாரணமாக உள்ளது
மேலும் பீகாரில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான பாஜகவின் செயல்பாட்டை தடுக்க ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. கர்நாடக மக்களும் இங்குள்ள பாஜகவினருக்கு நல்ல பாடம் புகட்ட காத்திருக்கின்றனர்.'' என கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications