‛‛காங்கிரஸ் அரசியல் செய்யக்கூடாது’’.. பாலியல் வழக்கில் ரேவண்ணா கைது.. அண்ணாமலையின் முதல் ரியாக்சன்!
பெங்களூர்: கர்நாடகாவில் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா, அவரது பேரன் பிரஜ்வல் ஆகியோர் பாலியல் வழக்கில் சிக்கி உள்ளனர். பிரஜ்வல் வெளிநாட்டில் உள்ள நிலையில் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் பாலியல் வழக்கில் காங்கிரஸ் அரசியல் செய்யக்கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் தலைவருமான தேவகவுடாவின் மகன் ரேவண்ணா. இவர் எம்எல்ஏவாக உள்ளார். ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிப்புரா தொகுதியின் ஜேடிஎஸ் எம்எல்ஏவாக ரேவண்ணா இருக்கிறார்.
ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ஹாசன் ஜேடிஎஸ் எம்பியாக உள்ளார். லோக்சபா தேர்தலையொட்டி கர்நாடகவாில் பாஜகவும், ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. பிரஜ்வல் மீண்டும் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இந்த தொகுதிக்கு கடந்த மாதம் 26ம் தேதி தேர்தல் நடந்தது.

அப்போது பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானது. இதையடுத்து அவர் ஜெர்மனி பறந்தார். மேலும் வீட்டின் முன்னாள் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி சிறை வைத்ததாக கூறி ரேவண்ணா மீது கேஆர் நகர் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்த கடத்தல் புகாரில் ரேவண்ணாவை நேற்று எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை மேற்கொள்ளும் போலீசார் கைது செய்தனர்.
ரேவண்ணாவை 4 நாட்கள் காவலில் எடுத்து எஸ்ஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின்போது பல தகவல்களை பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரின் பாலியல் வன்கொடுமை பற்றி 63609 38947 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். புகார் அளிக்கும் நபரின் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என எஸ்ஐடி தெரிவித்துள்ளது.
இதுபற்றி கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: ‛‛எச்டி ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடியாகி உள்ளது. ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எஸ்ஐடி செய்ய வேண்டும். சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் இந்த விஷயத்தில் அரசியல் ரீதியிலான குற்றச்சாட்டுகள் கூறுவதை விட்டுவிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, பெண்களுக்கு வேகமாக நியாயம் வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
எஸ்ஐடி எந்த நடவடிக்கை எடுக்கின்றனரோ? அதனை நியாயமாக எடுக்க வேண்டும். 2 அல்லது 3 மாதங்களில் எஸ்ஐடி விசாரணை நடத்தி நீதிமன்றம் வரை கொண்டு செல்ல உள்ளனர். எஸ்ஐடிக்கு நாங்கள் யாரும் தடையாக இல்லை. அமித்ஷா, கர்நாடகா பாஜக தலைவர்கள், வெளிமாநிலத்தை சேர்ந்த நான் உள்பட அனைவரும் நியாயம் கிடைக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம். எஸ்ஐடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கட்டும்'' என்றார்.
-
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications