199ல் இருந்து.. திடீரென 44.. பெங்களூரில் வேகமாக குறைந்த பலி எண்ணிக்கை.. எப்படி சாத்தியமானது?
பெங்களூர்: பெங்களூர் கடந்த திங்கள் கிழமை வரை தினமும் சராசரியாக 150-190க்கும் அதிகமான கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் திடீரென நேற்று பெங்களூர் நகரத்தில் 44 மரணங்கள் மட்டுமே பதிவாகி உள்ளன. இதற்கான காரணத்தை கர்நாடக மாநில சுகாதாரத்துறை கமிஷ்னர் டாக்டர் திரிலோக் சந்திரா விளக்கி உள்ளார்.
இந்தியாவில் தினசரி கொரோனா மரணங்கள் 2000 என்கிற ரீதியில் தற்போது பதிவாகி வருகிறது. தினசரி மரணங்கள் குறைந்தாலும், இந்தியாவின் உண்மையான பலி எண்ணிக்கையை இதை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பல்வேறு மாநிலங்களில் தற்போது பழைய கொரோனா மரணங்கள் கணக்கு எடுக்கப்பட்டு, அது தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. முன்பே பலியாகி, விடுபட்டு போன கொரோனா மரணங்கள் தற்போது பல்வேறு மாநிலங்களில் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகின்றன.

எப்படி
முக்கியமாக கர்நாடகாவில் இப்படி பல கொரோனா மரணங்கள் தொடக்கத்தில் கணக்கில் சேர்க்கப்படாமல் விடப்பட்டு போனது. ஏற்கனவே நிகழ்ந்த மரணங்கள் பல கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் விடுபட்டு போனது. இந்த மரணங்கள் கடந்த மே மாதத்தில் இருந்து தினமும் வரிசையாக கணக்கில் சேர்க்கப்பட்டது. இதனால்தான் கடந்த மே மாதத்தில் இருந்து பெங்களூர் நகரத்தில் கொரோனா மரணம் அதிகம் பதிவானது.

கர்நாடகா
கர்நாடகாவில் மே மாத தொடக்கத்தில் இருந்து தினமும் 350-650 வரை கொரோனா மரணங்கள் பதிவானது. பெங்களூர் நகரத்தில் மட்டும் 190-200 மரணங்கள் பதிவாகி வந்தன. இந்த நிலையில் நேற்று கர்நாடகாவில் வெறும் 179 மரணங்கள் மட்டுமே பதிவானது. இதில் 44 மரணங்கள் மட்டுமே பெங்களூர் நகரத்தில் பதிவாகி இருந்தது. திங்கள் கிழமை கர்நாடகாவில் 340 மரணங்களும், பெங்களூர் நகரத்தில் 199 மரணங்களும் பதிவான நிலையில் நேற்று பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

சரிவு
இந்த நிலையில் பலி எண்ணிக்கை இப்படி திடீரென சரிய காரணம் என்ன என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை கமிஷ்னர் டாக்டர் திரிலோக் சந்திரா விளக்கி உள்ளார். அதில், ஏற்கனவே பதிவு செய்யப்படாமல் போன கொரோனா மரணங்கள் கடந்த ஒரு மாதமாக தினமும் பதிவு செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனைகள் பல கொரோனா மரண விவரங்களை தாமதமாக அறிவித்தன. இதனால் பழைய மரணங்களை மொத்தமாக தினமும் சேர்த்து அறிவித்தோம். இதனால் தினசரி பலி எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

குறைந்துவிட்டது
ஆனால் இந்த பலி எண்ணிக்கை பல தற்போது அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே பலியான பலரின் புள்ளி விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் கர்நாடகாவில் தினசரி பலி எண்ணிக்கை நேற்று இருந்து குறைந்து வருகிறது. பெங்களூரிலும் முன்பே பலியான பலரின் விவரங்கள் கிட்டத்தட்ட அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் பெங்களூர் நகரத்திலும் பலி எண்ணிக்கை 199ல் இருந்து 44 ஆக குறைந்துள்ளது.

எப்படி நடந்ததது
மொத்தம் 4734 மரணங்கள் தாமதமாக கடந்த ஒரு மாதத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் 3961 மரணங்கள் பெங்களூர் நகரத்தில் மட்டும் ஏற்பட்டது. அதில் 2478 மரணங்கள் தனியார் மருத்துவமனைகளில் ஏற்பட்டது. இப்படி அறிவிக்கப்படாமல் போன மரணங்கள் தினமும் சேர்த்து அறிவிக்கப்பட்டதால், அதிக மரணங்கள் பதிவானது.

அறிவிக்கப்பட்டுவிட்டது
பழைய மரணங்கள் எல்லாம் ஏறக்குறைய அறிவிக்கப்பட்டுவிட்டதால், தற்போது பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. 18,198 பேர் கர்நாடகாவில் மார்ச் 12 - மே 31 வரை பலியாகிஉள்ளனர் . இதில் பெங்களூர் நகரத்தில் மட்டும் 10096 பேர் பலியாகி உள்ளனர்., என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இனி வரும் நாட்களில் பெங்களூரில் பலி எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications