Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பாடா.. நிம்மதி! ராகுலுக்கு அடுத்த குட்நியூஸ்.. அவதூறு வழக்கில் ஜாமீன் வழங்கிய பெங்களூர் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் 2019 முதல் 2023 வரை நடந்த பாஜக ஆட்சி ஊழல் நடந்துள்ளதாக கூறி அம்மாநில சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் விளம்பரம் செய்தது. இதுதொடர்பாக பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து ராகுல் காந்தி இன்று பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

கர்நாடகாவில் கடந்த 2019 முதல் 2023 வரை பாஜக ஆட்சி நடந்தது. கடந்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.

Rahul Gandhi Congress Defamation Case Bangalore Bengaluru Karnataka

முன்னதாக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தனர். பாஜக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது. பல்வேறு வகைகளில் கமிஷன் பெறப்படுகிறது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

குறிப்பாக முதல்வர் பதவிக்கு ரூ.2,500 கோடி, அமைச்சர் பதவிக்கு ரூ.500 கோடி நிர்ணயம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கொரோனாவை தடுக்கும் உபகரணங்களுக்கான டென்டர் விவகாரத்தில் 75 சதவீதம் கமிஷன், பொதுப்பணித்துறை டென்டரில் 40 சதவீத கமிஷன், மதம்சார்ந்த அமைப்புகளுக்கு 30 சதவீத மானியம் வழங்கியது என குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதுதொடர்பாக பத்திரிகைகளிலும் காங்கிரஸ் சார்பில் விளம்பரமும் கொடுக்கப்பட்டது.

இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் பாஜகவின் மாநில பொதுச்செயலாளரும், எம்எல்சியுமான கேசவ பிரசாத் சார்பில் 2023 மே மாதம் 8 ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். தற்போதைய முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட இன்னும் சிலர் மீது வழக்கு தொடரப்பட்டது.

பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி பாஜகவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் ஆஜராகி ஜாமீன் பெற்றனர். இவர்களுக்கு கடந்த 1ம் தேதி ஜாமீன் கிடைத்தது. ஆனால் ராகுல் காந்திக்கு இன்னும் இந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை. வழக்கில் தொடர்பாக ஜுன் 1ம் தேதி ஆஜராக ராகுல் காந்திக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் லோக்சபா தேர்தலை காரணம் காட்டி ஆஜராகவில்லை. மேலும் காலஅவகாசம் கோரினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஜுன் 7 ல் ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி இன்று காலையில் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானத்தில் பெங்களூர் புறப்பட்டு சென்றார். பெங்களூர் விமான நிலையத்தில் அவரை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் வரவேற்றனர். அதன்பிறகு ராகுல் காந்தி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனால் ராகுல் காந்தி நிம்மதியடைந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+