பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடக சட்ட மேலவை துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை... போலீஸ் விசாரணை..!

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக சட்ட மேலவை துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடா சிக்மங்களூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Recommended Video

    தண்டவாளம் அருகே அரசியல் தலைவர் சடலம்: கர்நாடகாவில் நிகழ்ந்த சோகம்!

    எஸ்.எல். தர்மேகவுடாவின் சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கியுள்ள போலீஸ் இதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறது.

    தர்மேகவுடா தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.

    நேற்றிரவு

    நேற்றிரவு

    நேற்றிரவு வெளியில் ஒரு சிறிய வேலை இருப்பதாக கூறி தர்மேகவுடா வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். ஆனால் இரவு முழுவதும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் இது தொடர்பான புகாரை போலீஸில் அளித்திருந்தனர். ஆனால் அதற்குள் அவரது மரணச் செய்தி வந்துவிட்டது.

    துணை சபாநாயகர்

    துணை சபாநாயகர்

    தற்கொலை செய்துகொண்ட தர்மேகவுடா கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்ட மேல் சபையின் துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த இவர் தேவகவுடாவின் தீவிர விசுவாசியாக திகழ்ந்தார்.

    தேவகவுடா இரங்கல்

    தேவகவுடா இரங்கல்

    இதனிடையே தர்மே கவுடாவின் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக தேவகவுடா தெரிவித்துள்ளார். பொதுவாழ்வில் போற்றத்தக்க வகையிலும், அமைதியான முறையிலும் நடந்துகொண்டவர் தர்மேகவுடா என தேவகவுடா புகழாரம் சூட்டியுள்ளார்.

    அப்பழுக்கற்றவர்

    அப்பழுக்கற்றவர்

    எஸ்.எல்.தர்மேகவுடா மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். கட்சியில் படிப்படியாக முன்னேறி உயர்ந்த இடத்தை அடைந்தார். இதனிடையே தர்மேகவுடா அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்றும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    English summary
    Deputy speaker of karnataka Legislative council Dharmegowda sucide
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X