அடக்கொடுமையே.. முதல்-அமைச்சராக கிணற்றை மூடிய பாஜக எம்எல்ஏ? வடிவேலு போல் போலீசுக்கு ஓடிய காங்கிரஸ்
பெங்களூர்: கர்நாடக மாநில முதல் அமைச்சர் பதவிக்காக ஜோதிடர் கூறியதை கேட்டு வீட்டு அருகே இருந்த பொது பயன்பாட்டுக்கான கிணற்றை பாஜக எம்எல்ஏ மூடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வடிவேலு பாணியில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் போலீசில் புகார் செய்துள்ளார்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக எடியூரப்பா இருந்த நிலையில் வயது முதிர்வால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது அந்த பதவியை பெற மூத்த தலைவர்கள் பலர் போட்டியிட்ட நிலையில் அதில் பசவராஜ் பொம்மைக்கு பாஜக மேலிடம் பச்சைக்கொடி காட்டியது.

முதல்வர் பதவி போட்டியில்...
இந்த வேளையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி-தார்வார் மேற்கு சட்டசபை தொகுதி பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லத்துக்கு முதல் அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. முதல் அமைச்சர் பதவியை பெற கட்சி தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் டெல்லியில் முகாமிட்டு இருந்தார். ஆனால் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை. இவர் கடந்த 2013ல் முதல் முதலாக உப்பள்ளி-தார்வார் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு 2018 தேர்தலிலும் அதே தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். 2 முறை மட்டுமே எம்எல்ஏவாக உள்ள நிலையில் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

காணாமல் போன கிணறு
இந்த நிலையில், அரவிந்த் பெல்லத் வீட்டின் அருகே பொதுமக்களின் பயன்பாட்டுக்கான பொது கிணறு இருந்தது. இந்த கிணறு தற்போது மூடப்பட்டுள்ளது. கிணறு இருந்த இடத்தில் தற்போது பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கிணற்றை காணோம். கிணற்றை கண்டுப்பிடித்து கொடுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான நாகராஜ் கவுரி புகார் கொடுத்துள்ளார்.

வடிவேலு பாணியில் புகார்
தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு கிணற்றை காணவில்லை என போலீசில் புகார் செய்வார். அதேபோல் தற்போது கர்நாடகாவில் கிணற்றை காணவில்லை எனவும், பாஜக எம்எல்ஏ கிணற்றை மூடியுள்ளதாகவும் கூறி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நாகராஜ் கவுரி கூறியதாவது:

நடவடிக்கை தேவை
‛‛கிணறு மாயமானது பற்றி பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் செய்தனர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிணற்றை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளேன். இதுபற்றி விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், லோக் அயுக்தா போலீசில் புகார் செய்ய உள்ளேன்'' என்றார்.

ஜோதிடரின் பேச்சை கேட்டு..
இதற்கிடையே தான் கிணற்றை மூடியதன் பின்னணியில் ஜோதிடர் இருப்பதாக அந்த பகுதி மக்கள் பேசி வருகின்றனர். அதாவது பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லத் ஜோதிடரின் பேச்சை கேட்டு கிணற்றை மூடியுள்ளார். கிணற்றை மூடினால் மாநில முதல்வராகலாம் என ஜோதிடர் கணித்து கூறியதால் அவர் இந்த செயலை செய்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications