பொறுமையை சோதிக்க கூடாது.. உடனே நாடு திரும்பனும்..பேரன் பிரஜ்வலுக்கு எதிராக சீறிய தேவகவுடா
பெங்களூர்: பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக நாடு திரும்பி சரண் அடையாவிட்டால் எனது கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று தேவகவுடா தனது பேரனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பாலியல் புகாரில் சிக்கியதும் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை தேகவவுடா விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா, பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் கடந்த 26-ம் தேதி வெளியாயின. இதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பியோடினார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க கர்நாடகா சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டு வெளிச்சத்திற்கு வரும் முன்பாக பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிவிட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். தற்போது ஜெர்மனியில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
அவர் பெங்களூர் திரும்ப டிக்கெட் பதிவு செய்து வைத்து இருந்ததாகவும் அதையும் தற்போது ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரஜ்வல் ரேவண்ணா தொடர்ந்து தலைமறைவாகவே இருப்பது முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான தேகவுடா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.
ஏற்கனவே, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணாவை குமாரசாமி சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இந்த நிலையில்தான், பிரஜ்வல் ரேவண்னா உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்றும் இல்லையென்றால் தனது கோபத்திற்கு ஆளாக நேரிடும் என தேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக நாடு திரும்ப வேண்டும். திரும்பி வந்து விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். சிறப்பு விசாரணைக்குழு விசாரணையில் நானோ எனது குடும்பத்தினரோ எந்த வகையிலும் தலையிட மாட்டோம். பொறுமையை சோதிக்காமல் பிரஜ்வல் ரேவண்னா நாடு திரும்ப வேண்டும். சட்டத்திற்கு கீழ் படிய வேண்டும்.
எனது எச்சரிக்கையை காதில் வாங்காவிடில் நான் உட்பட குடும்பத்தினர் கோபத்திற்கு பிரஜ்வல் ஆளாக நேரிடும். என் மீது கொஞ்சமாவது மதிப்பு இருந்தால் பிரஜ்வல் உடனே திரும்பி வர வேண்டும். பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி பெறுவதே எனது முதன்மையான நோக்கம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications