ஹெலிகாப்டரில் பறந்த ஆடு மேய்ப்பவர்கள்.. கர்நாடகாவில் நெகிழ்ச்சி சம்பவம்.. என்ன காரணம் தெரியுமா?
சித்ரதுர்கா : கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் ஹெலிகாப்டரில் பறந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் ஹெலி டூரிசம் எனும் ஹெலிகாப்டர் பயண சுற்றுலா அமைக்கப்பட்டுள்ளது.
சித்ரதுர்கா மாவட்டத்தில் புதிதாக ஹெலி டூரிசம் தொடங்கப்பட்ட நிலையில், விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகள் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஹெலி டூரிசம்
கர்நாடக மாநிலத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹம்பி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹெலி டூரிசம் அமைக்கப்பட்டுள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவில் ஹெலி டூரிசம் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், 200 விவசாயிகள், ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் இலவசமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.

இலவசமாக பறக்க அனுமதி
சித்ரதுர்கா மாவட்டத்தில் ஹெலி டூரிசம் புதிதாக தொடங்கப்பட்ட நிலையில், அதனை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் முதல் 2 நாட்கள் இலவசமாக ஹெலிகாப்டரில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அப்பகுதி விவசாயிகள், ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணித்து சுற்று வட்டார பகுதிகளை கண்டு களித்தனர்.

200 விவசாயிகள்
கடந்த 2 நாட்களாக காலை 8 மணி முதல் மாலை 2.30 மணி வரை ஹெலிகாப்டர் ரைடு நடத்தப்பட்டது. இதன் மூலம் சுமார் 200 விவசாயிகள் ஹெலிகாப்டரில் இலவசமாக பறந்து சென்றனர். இதைதொடர்ந்து இனி வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வசூலித்துக்கொண்டு ஹெலிகாப்டர் ரைடு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகு சவாரி
ஹெலி டூரிசத்தை ஊக்குவிக்க ஹெலிகாப்டர் ரைடு நடத்தப்பட்டதுபோல் வாணி விலாஸ் அணைக்கட்டில் இலவச படகு சவாரியும் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒசதுர்கா தொகுதி எம்.எல்.ஏ கூலிஹட்டி டி.சேகர் செய்திருந்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications