ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் கல்லூரிகள் இன்று திறப்பு - உடுப்பி, மைசூருவில் 144 தடை உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சினையால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. உடுப்பி, மைசூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: ஹிஜாப் பிரச்சினையால் கர்நாடகா மாநிலத்தில் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. மைசூரு, உடுப்பி மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரும் விவகாரம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹிஜாப் அணிவதற்கு போட்டியாக இந்து மாணவிகள் காவித்துண்டு அணிந்து வரவே போராட்டங்கள் வெடித்தன. உடுப்பி மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. ஒரு கல்வி நிறுவனத்தில் தேசிய கொடிக்கம்பத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது.

இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை. இந்த விவகாரம் மாநில உயர்நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்தவித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டது.
இந்த சூழ்நிலையில் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகளை மீண்டும் திறக்க முதல்வர் பசவராஜ் பொம்மை கடந்த 10ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை அனுமதிக்க ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாக்குவாதம் மூண்டது. ஹிஜாப்பை அகற்றிய பிறகே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இன்றைய தினம் மாநிலம் முழுவதிலும் உள்ள பியுசி, பட்டய கல்லூரிகள், பாலிடெக்னிக், நர்சிங்உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடுப்பி, ஷிமோகா, மைசூரு ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிறுவனங்களைச் சுற்றி 200 மீட்டர் தூரத்துக்கு கூட்டம் போடவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதேபோல கல்வி நிலையங்களுக்கு அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேர்வுகள் நெருங்கி வருவதால் கல்லூரிகள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலான உடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடாமல் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications