மக்கள் பிரச்சினையில் சமரசம் கிடையாது மேகதாது அணை கட்டுவது உறுதி.. கர்நாடக முதல்வர் பொம்மை பிடிவாதம்
பெங்களுரு: மக்கள் தொடர்பான பிரச்சினையில் எந்த சமரசமும் கிடையாது என்றும் காவிரியில் மேகதாது அணை கண்டிப்பாக கட்டுவோம் என்று கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை பிடிவாதமாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு-கர்நாடகா இடையே மேகதாது அணை விவகாரம் இன்னும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மேகதாது அணை பிரச்சினை மீண்டும் விஸ்வரூபமெடுக்க மூல காரணம் கர்நாடக முதல்வர் எடியூரப்பாதான்.
''பெங்களுரு குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் மேகதாது அணை திட்டத்தை தொடங்குவோம்'' என்று எடியூரப்பா சர்ச்சை பேட்டி அளித்து பிரச்சினையை தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் கொந்தளிப்பு
ஒப்பந்த விதிகளின்படி காவிரியில் இருந்து தமிழ்நாடு தண்ணீர் பெற்று வருகிறது. இந்த காவிரி நீர்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உயிர்நாடியாக இருக்கிறது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணை தொடர்பாக வழக்கு உள்ளதால், கர்நாடக அரசின் பிடிவாதத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் காவிரி நீரையே நம்பி இருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஓரணியில் திரண்ட கட்சிகள்
''மேகதாது அணை கட்டக்கூடாது. இது நல்லுறவுக்கு உகந்த சூழ்நிலை அல்ல'' என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், எடியூரப்பாவுக்கு அதிரடி பதில் கொடுத்தார். காவிரி மேலாண்மை வாரியத்திலும் தமிழ்நாடு தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது. மேலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் ஆளும் கட்சி, எதிர்க்க்கட்சி என அனைத்து கட்சிகளும் ஓன்று சேர்ந்தன.

கர்நாடகாவுக்கு எதிராக தீர்மானம்
தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் ஓன்று சேர்ந்து மேகதாது அணை கட்ட முடிவெடுத்து இருக்கும் கர்நாடகா அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் இந்த தீர்மான நகலை கட்சிகளின் பிரதிநிதிகள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் ஒப்படைத்தனர். மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடிதம் எழுதினார்.
Recommended Video

பசுவராஜ் பொம்மை பிடிவாதம்
கர்நாடகா முதல்வராக இருந்த எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்த பிறகு புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்டார். புதிய முதல்வர் பசுவராஜ் பொம்மையும் மேகதாது அணை கட்டுவதில் உறுதியாக இருக்கிறார். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தடாலடியாக அறிவித்தார் பொம்மை. இந்த நிலையில் இன்று கர்நாடக மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றிய பொம்மை '' மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் மேகதாது அணை கட்டப்படும் என்று உறுதியாக கூறியுள்ளார்.

பெங்களூரு குடிநீர்
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் அரசு அதிகாரிகளிடம் பிரச்சினையின் அனைத்து பரிமாணங்களையும் விளக்கியுள்ளோம். அதற்கான உரிய அனுமதியைப் பெற்ற பிறகு மேகதாது அணை திட்டத்தை தொடங்குவோம். மேகதாது அணை கட்டும்பட்சத்தில் இங்கு இருந்து கிடைக்கும் 4.75 டி.எம்.சி தண்ணீரை பெங்களூரு மற்றும் அண்டை பகுதிகளில் குடிநீராகப் பயன்படுத்த வேண்டும்.

சமரசம் கிடையாது
பெங்களூரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதையே இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தவிர 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ள முடியும். ஆனாலும் தமிழகம் இந்த திட்டத்தை எதிர்க்கிறது. தங்கள் மாநிலத்தின் நலன்களுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், பாசன வசதி பெறும் விவசாயிகளின் தண்ணீரைப் பறிப்பதாகவும் தமிழகம் கூறுகிறது. கர்நாடகாவின் எல்லை, மொழி, நிலம், நீர் மற்றும் அதன் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் வரும்போது நான் எந்தவித சமரசம் செய்யமாட்டேன். இவ்வாறு பசுவராஜ் பொம்மை தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications