Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் பிளானே வேற! படுதோல்விக்கு நடுவே துணை முதல்வராகும் ஜெகதீஷ் ஷெட்டர்? இப்படி ஒரு திட்டமா?ஆஹா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு பாஜக சீட் மறுத்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து அவர் தேர்தலை எதிர்கொண்ட நிலையில் படுதோல்வியடைந்தார். இருப்பினும் ஜெகதீஷ் ஷெட்டரால் காங்கிரஸ் மத்திய மற்றும் மும்பை கர்நாடகாவில் ஏராளமான தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் அவருக்கு துணை முதல்வர் அல்லது அமைச்சர் பொறுப்பு வழங்கலாம் எனவும், இதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சி பெரிய திட்டத்தை வைத்துள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்தது. பாஜக மொத்தம் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் தொங்கு சட்டசபை அமைந்தால் காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகும் கனவில் இருந்த குமாரசாமிக்கும் இந்த தேர்தலில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. அவரது ஜேடிஎஸ் கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வாகை சூடியது.

Karnataka Election Result: Congress may gives Deputy CM or Minister post to Jagadish Shettar who lost in Hubbali-Dharwad Central

மேலும் இந்த தேர்தலில் பல பிரபலங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. பாஜகவில் அமைச்சர்கள் 11 பேர் தோல்வியடைந்தனர். மேலும் சிட்டிங் எம்எல்ஏக்கள் பலரும் வீழ்த்தப்பட்டுள்ளனர். அப்படி கர்நாடகா தேர்தலில் தோல்வியடைந்த ஒரு பிரபலம் தான் ஜெகதீஷ் ஷெட்டர். கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான இவர் பாஜகவில் பயணித்து வந்தார்.

1994 முதல் உப்பள்ளி-தார்வார் சென்ட்ரல் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். 6 முறை அந்த தொகுதியில் வெற்றி பெற்ற ஜெகதீஷ் ஷெட்டருக்கு இந்த முறை தேர்தலில் பாஜக சீட் கொடுக்கவில்லை. இதனால் அவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் அவர் உப்பள்ளி-தார்வார் சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தோல்வியடைந்தார்.

இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் மகேஷ் தென்கினகாய் 95,064 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் 60775 ஓட்டுகள் பெற்று சுமார் 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். உப்பள்ளி-தார்வார் சென்ட்ரல் தொகுதியில் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகளின் கட்டமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. அடிப்படையில் ஆர்எஸ்எஸ்ஸில் இருந்து வந்த ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்ததால் தோல்வியடைந்தார்.

கர்நாடகா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான அலை இருந்தாலும் கூட ஜெகதீஷ் ஷெட்டரால் அந்த தொகுதியில் ஜெயிக்கமுடியவில்லை. எடியூரப்பா, அமித்ஷா ஆகியோர் நேரடியாக அவரை தோற்கடிக்க களமிறங்கியது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரசாரம், மத்திய அமைச்சரும், தார்வார் தொகுதி எம்பியுமான பிரகலாத் ஜோஷியின் வியூகம் உள்ளிட்டவை ஜெகதீஷ் ஷெட்டருக்கு வீழ்ச்சியை கொடுத்துள்ளன.

இந்நிலையில் தான் தோல்வியடைந்த ஜெகதீஷ் ஷெட்டரை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடகா மாநில மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, மாநில தலைவர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டவர்கள் ஜெகதீஷ் ஷெட்டரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். மேலும் அவரை உடனடியாக பெங்களூர் கிளம்பி வர கூறியுள்ளனர்.

கர்நாடகாவின் அடுத்த முதல்வரை தேர்வு செய்யகாங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும்படிஅவரை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அழைத்துள்ளனர். இதற்கிடையே தான் ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவுகிறது. அவருக்கு துணை முதல்வர் அல்லது அமைச்சர் பதவி வழங்கலாம் என கூறப்படுகிறது. தற்போது அவர் தோல்வியடைந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் எம்எல்சி பதவி வழங்கி அதன்மூலம் அவருக்கு இந்த பதவியில் ஏதேனும் ஒன்றை காங்கிரஸ் கொடுக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவுக்கு பின்னால் மிகப்பெரிய பிளான் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாதது ஜெகதீஷ் ஷெட்டர் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த சமுதாயத்தினர் பாஜகவின் ஓட்டு வங்கியாக உள்ளனர். குறிப்பாக மத்திய கர்நாடகா மற்றும் மும்பை கர்நாடகா பகுதிகளில் அதிகளவில் வசிக்கின்றனர். ஜெகதீஷ் ஷெட்டரும் இந்த பகுதியை சேர்ந்தவர் தான். மேலும் அவருக்கும் அந்த பகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. அவரது ஆதரவாளர்கள் பல மாநிலங்களில் உள்ளனர்.

இது தற்போதைய சட்டசபை தேர்தலில் எதிரொலித்துள்ளது. அதாவது தேர்தல்களில் எப்போதும் மத்திய கர்நாடகா மற்றும் மும்பை கர்நாடகா மாவட்டங்களில் பாஜக தான் அதிக இடங்களில் வெற்றி பெறும். ஆனால் இந்த முறை காங்கிரஸ் அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதற்கு பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதி முக்கிய காரணமாக உள்ளனர். இதில் லட்சுமண் சவதி அதானி தொகுதியில் வென்ற நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் தோற்றுள்ளார்.

இதனால் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஒரு பதவி வழங்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவருக்கு பதவி வழங்குவதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு லிங்காயத் சமுதாயத்தினரின் ஓட்டுகள் கூடுதலாக கிடைக்கலாம் என காங்கிரஸ் நம்புகிறது. இந்நிலையில் தான் அவருக்கு துணை முதல்வர், அமைச்சர் பதவி வழங்கலாம் என்ற தகவல் பரவுகிறது. மேலும் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தார்வார் தொகுதியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை எதிர்த்து அவரை களமிறக்கவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த பொறுப்புகளை ஜெகதீஷ் ஷெட்டர் ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அவர் முதல்வராக இருந்தவர். இத்தகைய சூழலில் அதனை விட அதிகாரம் குறைந்த துணை முதல்வர், அமைச்சர் பதவியை அவர் ஏற்பாரா? அல்லது நிராகரிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+