‛‛நிர்வாண’’ வழிபாடு..தந்தையின் கடனால் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை..வெளியான வீடியோ.. பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் தந்தை வாங்கிய கடனை திரும்ப செலுத்த தவறிய நிலையில் 15 வயது மகனை ஏமாற்றி நிர்வாண வழிபாடு செய்ய வைத்து வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடன் வாங்கி ஏராளமானவர்கள் பிரச்சனைகளில் சிக்கி வருகின்றனர். பலர் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மேலும் சில சந்தர்ப்பங்களில் கடன் வழங்கிய நபர்கள் கடன் வாங்கியவர்களை துன்புறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

கடன் வாங்கிய தந்தை
கர்நாடகா மாநிலத்தில் கொப்பல் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் கொப்பல் புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கிராத்தில் வசித்து வருபவர் 15 வயது சிறுவன். இவரது தந்தை புதிதாக வீடு கட்ட கடன் வாங்கினார். இந்த கடனை அவரால் உரிய நேரத்தில் திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் சிறுவனும் கூலி வேலை செய்ய தொடங்கினார்.

வெளியான நிர்வாண வீடியோ
தார்வார் மாவட்டம் உப்பள்ளி, தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்ற சிறுவன் குடிநீர் குழாய் பதித்தல், கட்டட பணி செய்தல் உள்பட பல்வேறு கூலி வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் தான் சிறுவனின் நிர்வாண வீடியோ ஒன்று வெளியானது. செல்போனில் பரவிய இந்த வீடியோவை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் விசாரணை நடத்தினர்.

நடந்தது என்ன?
இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது அவரது தந்தைக்கு கடன் கொடுத்தவர்கள் சிறுவனை சமீபத்தில் சந்தித்தும், நிர்வாண வழிபாடு செய்தால் தந்தை கடன் பிரச்சனை உள்பட அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவார் என கூறியதும் தெரியவந்தது. மேலும் சிறுவனை கட்டாயப்படுத்திய அவர்கள் நிர்வாணப்படுத்தி வழிபாடு செய்ய வைத்து வீடியோவாக எடுத்ததும், அந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் பரவி வருவதும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணை
இதுபற்றி கொப்பல் புறநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் இந்த சம்பவம் ஜூன் மாதம் நடந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியான நிலையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்ய உள்ளோம் என போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications