பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காந்தி நல்லவருங்க.. ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள்.. பல்டியடித்த 'கர்நாடக எச்.ராஜா'

Google Oneindia Tamil News

பெங்களூர்: நாதுராம் கோட்சேவை புகழ்ந்துரைத்த ட்வீட்டை, கடும் சர்ச்சைகளையடுத்து டெலிட் செய்த மத்திய இணை அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே, தனது ட்வீட்டர் கணக்கே ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று அந்தர் பல்டியடித்துள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக பிரமுகரான அனந்த்குமார் ஹெக்டே, நம்மூர் பாஜக பிரமுகர் எச்.ராஜா போன்றவர். பேச்சு, நடவடிக்கை, சர்ச்சை என அனைத்திலும், எச்.ராஜாவின் அண்ணன்தான், இவர்.

My account was hacked since yesterday, says Anantkumar Hegde

ஆனாலும், எச்.ராஜா போல இன்றி, இவர் எப்படியோ தேர்தலில் வெற்றி பெற்றுவிடுகிறார். கடந்த லோக்சபா தேர்தலில் உத்தர கனரா தொகுதியில் வெற்றி பெற்றவர். தற்போது மத்திய திறன் வளர்ப்பு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில், நாதுராம் கோட்சே தொடர்பாக சர்ச்சைக்குரிய ஒரு ட்வீட்டை வெளியிட்டிருந்தார். அதில், 7 தசாப்தங்கள் கழித்து, மாறிவிட்ட சூழ்நிலைக்கு நடுவே, இப்போதைய தலைமையினர் விவாதம் நடத்துவதை அறிந்து, நாதுராம் கோட்சே மகிழ்ச்சியடைந்திருப்பார் என தெரிவித்திருந்தார். நாதுராம் கோட்சை தரப்பு நியாயங்களை இத்தலைமுறை ஏற்பதாக இவரது ட்வீட் பொருள் தந்தது.

இந்த ட்வீட் தொடர்பாக கடும் சர்ச்சை எழுந்தன. ஏற்கனவே, பிரக்யாசிங், நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என கூறி சர்ச்சையான நிலையில் அவர் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து, திடீரென அனந்த்குமார் ஹெக்டே ட்விட்டர் கணக்கிலிருந்து, கோட்சே பற்றிய ட்வீட் மாயமாகிவிட்டது. அதுகுறித்து லேட்டஸ்ட்டாக வெளியிட்ட ட்வீட்டில், "நேற்று முதல், எனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டது. காந்தியின் கொலையை நியாயப்படுத்த முடியாது. காந்தி இந்த நாட்டுக்கு அளித்த பங்களிப்புக்கு அனைவரது மரியாதையும் உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார். ஹேக் செய்யப்பட்டுவிட்டதை நம்ப முடியாது என்று அவர்கள் கேலி செய்கிறார்கள். தமிழகத்தில் பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என எச்.ராஜா ட்விட்டரில் கருத்து கூறிய நிலையில், எதிர்ப்பு பலமான நிலையில், அதை அட்மின் வெளியிட்டதாக கூறி டெலிட் செய்தார் எச்.ராஜா என்பது குறிப்பித்தக்கது.

English summary
My account was hacked since yesterday. There is no question of justifying Gandhi ji's murder. There can be no sympathy or justification of Gandhi ji's murder. We all have full respect for Gandhi ji's contribution to the nation, says Anantkumar Hegde.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X