"இதுதான் வளர்ச்சி".. பெங்களூர் IT பணியை விட்டு கரூரில் பலூடா கடை திறந்த இன்ஜினியர்.. இப்போ எப்படி இருக்காரு பாருங்க
பெங்களூர்: பெங்களூரில் ஆரக்கள் இந்தியா நிறுவனத்தின் ஆபரேஷன் பிரிவின் தலைவராக இருந்த பிரதீப் கண்ணன் என்பவர் கைநிறைய சம்பளம் பெற்ற நிலையில் கடந்த 2019ம் ஆண்டில் தனது பணியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு தமிழகத்தின் கரூருக்கு வந்தவர் பலூடா ஐஸ்கிரீம் வியாபாரத்தை தொடங்கினார். அப்போது அவரை பார்த்து பலரும் சிரித்தனர். ஆனால் 6 ஆண்டுகளில் இப்போது இந்தியா, துபாயில் 18 கடைகளுக்கு சொந்தக்காரராக மாறி உள்ளார்.
தற்போது ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். ஏஐ வருகையால் பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகிறது. இதனால் ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் பலரும் பயத்துடன் பணியாற்றி வருகின்றனர்.

எங்கே தங்களின் வேலை பறிபோய் விடுமோ? என்ற அச்ச உணர்வில் பணியாற்றி வருகின்றனர். இப்படியான சூழலில் தான் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறார் பிரதீப் கண்ணன். ஆரக்கள் நிறுவனத்தின் பணியை உதறிவிட்டு பலூடா ஐஸ்கிரீம் கடையை திறந்து வெற்றி கண்டு பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளார்.
‛The Falooda Shop' பிராண்டை உருவாக்கியது பற்றி பிரதீப் கண்ணன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛நான் எனது பணியை விடும்போது என்னை பார்த்து சிரித்தனர். ஏனென்றால் நான் நல்ல வேலையில் இருந்தேன். அது 9-5 மணி வேலையாகும். இந்தியாவின் ஆரக்கள் நிறுவனத்தில் ஆபரேஷன் ஹெட்டாக இருந்தேன். நல்ல சம்பளம் வந்தது. அழகான குடும்பம் அமைந்தது. செட்டில் ஆகிவிட்டேன் என்று இந்த சமூகம் என்னை பார்த்து கூறியுள்ளது. ஆனால் என் மனம் ஏற்கவில்லை. என் மனதுக்குள் வேறு விஷயம் இருந்தது.
People laughed at me for leaving my job.
— Pradeep Kannan (@Pradeepkannanj) October 31, 2025
I had the perfect 9-5.
• Operations Head at Oracle India
• Good salary
• Beautiful family
Society said: You’re settled.
But something inside me wasn’t.
So in 2019, I did the unthinkable.
I left Bangalore and moved back to
Karur… pic.twitter.com/4KmeK2cvjP
இதனால் கடந்த 2019ம் ஆண்டில் பணியை ராஜினாமா செய்து பெங்களூரை விட்டு வெளியேறினேன். தமிழ்நாட்டின் சிறிய நகரான கரூருக்கு வந்தேன். அங்கு பலூடா ஐஸ்கிரீம் விற்பனையை தொடங்கினேன், எல்லோரும் நான் தோற்றுவிடுவேன் என்று நினைத்தனர். ஆனால் 6 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது எனக்கு இந்தியா மற்றும் துபாயில் 18 க்கும் அதிகமான ‛அவுட்லெட்' உள்ளது.
இப்போது நான் இந்தியாவின் D2C ஐஸ்கிரீம் பிராண்டை உருவாக்கி வருகிறேன். எனது இந்த பயணம் என்பது சிறிய நகரத்தில் கனவு கண்ட இளைஞன் → ஏசி அலுவலக பணி → franchise கிச்சன்ஸ் → global shelves என்று மாறி உள்ளது'' என கூறியுள்ளார். இதனை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
பிரதீப் கண்ணன் இந்த பதிவை நேற்று மாலை 3.36 மணிக்கு எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு இன்று மாலை 3.36 மணி வரை மெத்தம் 830K பார்வையை பெற்றுள்ளது. 838 பேர் ரீபோஸ்ட் செய்துள்ளனர். 10.5K லைக்ஸ்களை அள்ளி உள்ளது. மேலும் அவரது இந்த பதிவை தொடர்ந்து அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி 1,800 பேர் வரை அவரை பாலோ செய்துள்ளனர். இதனையும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications