"இந்தியா தான் பெஸ்ட்.. இப்படியொரு நாட்டை பார்த்ததே இல்லை!" பாராட்டி தள்ளிய வெளிநாட்டு பெண்! வாவ் செம

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண் ஒருவர், நமது நாட்டை புகழ்ந்து தள்ளி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். கடந்த 11 வருடங்களாக இந்தியாவில் வசித்து வரும் அந்த பெண், ஏன் இந்தியா மிகச் சிறந்த நாடு என்பதை மூன்று பாயிண்டுகளில் எளிமையாக விளக்கியுள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்காக இந்தியர்கள் பலரும் வெளிநாடுகளுக்குச் செல்வதை நாம் பார்த்திருப்போம். அதேபோல நிம்மதியான வாழ்க்கைக்காக வெளிநாட்டினரும் கூட கணிசமான அளவுக்கு இந்தியாவுக்கு வருகிறார்கள். சும்மா ஒரு சில மாதங்கள் இந்தியாவில் தங்கலாம் என வந்தாலும் இந்தியாவின் அழகைக் கண்டு வியந்து, அவர்கள் நீண்ட காலம் இந்தியாவிலேயே தங்கிவிடுகிறார்கள்.

offbeat India

பெங்களூரில் வசிக்கும் ரஷ்யப் பெண்

அப்படிக் கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் ரஷ்யப் பெண் ஒருவர், ஏன் இந்தியா மிகச் சிறந்த நாடு என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். பெங்களூரில் வசிக்கும் ரஷ்யப் பெண் இலியா அஸ்லாமோவா என்பவர் தான் இதைப் பதிவிட்டிருக்கிறார். தான் இந்தியாவிற்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக இன்ஸ்டாகிராமில் அவர் இதைப் பகிர்ந்துள்ளார்.

ஏன் பிடிக்கும்

ஆரம்பத்தில் ஓராண்டு மட்டுமே இந்தியாவில் வசிக்கும் பிளான் இருந்ததாம்.. ஆனால், இந்தியாவுக்கு வந்த பிறகுத் தனது பிளான் மொத்தமாக மாறிவிட்டதாக அவர் பதிவிட்டிருக்கிறார். மேலும், இந்தியா தனது வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதையும் அவர் விவரித்துள்ளார். அந்த வீடியோவில் அஸ்லாமோவா இந்திய உடையான சல்வார் அணிந்து, நெற்றியில் சிறிய பொட்டுடன் காணப்பட்டார். தங்கள் நாட்டின் உடையை விட்டுவிட்டு, நமது உடையை அணிவதை அவர் இந்தியாவை எந்தளவுக்கு விரும்புகிறார் என்பதைக் காட்டுவதாக இருக்கிறது.

அதீத அன்பு

இந்தியா மீது தனக்கு இருக்கும் அதீத அன்பிற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாகச் சொல்லி, அதை அவர் பட்டியலிட்டுள்ளார். முதலாவதாக இந்தியாவின் விருந்தோம்பல் நிகரற்றது என்று அஸ்லாமோவா கூறியிருக்கிறார். அவர் இது குறித்துக் கூறுகையில், "இங்குள்ள மக்கள் மிகவும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். மேலும், இவர்களின் விருந்தோம்பலும் இணையற்றது. இங்குள்ள மக்கள் அனைவரும் உதவும் எண்ணத்துடனும் இருப்பார்கள். ஒரு இடத்திற்கு எப்படிச் செல்வது என்று நீங்கள் யாரிடமாவது கேட்டால் எல்லாருமே உதவ முயல்வார்கள்" என்றார்.

இந்தியாவின் அழகு

அடுத்து இந்தியா மக்களை ஈர்க்கும் ஒரு மிக சிறப்பான ஒரு நாடு என்று அவர் வர்ணித்தார். இது குறித்து அவர் மேலும், "நீங்கள் எதைப் பார்க்க விரும்புகிறீர்களோ.. எதை நம்புகிறீர்களோ.. அதையே இந்த நாடு உங்களுக்குக் காட்டும். எனது நண்பர்கள் சிலர் தவறான முன்முடிவுகளுடன் இங்கு வந்து சிரமப்பட்டார்கள். ஆனால் நான் இங்கு வந்ததும் மிகுந்த அன்பான வரவேற்பைப் பெற்றேன்.. இங்குள்ள அழகைக் கண்டேன்" என்று தனது பதிவிட்டு இருக்கிறார்.

அதாவது எதை எதிர்பார்த்து இந்தியாவுக்கு வருகிறீர்களோ.. அதைத் தான் இந்தியா உங்களுக்குத் தெரியும் என அவர் பதிவிட்டிருக்கிறார்.. மூன்றாவதாக இந்தியாவில் தான் எப்போதும் மிகவும் பாதுகாப்பானது என்று அஸ்லாமோவா கூறியிருக்கிறார்.. அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அவரது கருத்துக்களையும், அவர் இந்தியாவை தன் சொந்த நாட்டைப் போல ஏற்றுக் கொண்ட விதத்தையும் பலர் பாராட்டினர். இன்ஸ்டாகிராம் பயோவில் தன்னை "இந்தியாவின் மருமகள்" என்று குறிப்பிட்டுள்ள இலியா அஸ்லாமோவாவுக்கு 22 ஆயிரம் பாலோயர்ஸ் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+