பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹிஜாப் விவகாரம்: மாணவி தரப்பு வழக்கறிஞரை குறிவைத்த இந்துத்வ அமைப்புகள்..ஆதரவளித்த ராமகிருஷ்ண ஆசிரமம்

Google Oneindia Tamil News

பெங்களூரூ : ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவதத் காமத்-க்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் அவருக்கு ராமகிருஷ்ண ஆஸ்ரமம் ஆதரவு அளித்துள்ளது.

Recommended Video

    Hijab எங்கள் உரிமை - Thowheed Jamath Protest | Oneindia Tamil

    கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து சென்றதால் டிசம்பர் மாத இறுதியில் கர்நாடகாவில் ஹிஜாப் பற்றிய சர்ச்சை வெடித்தது.

    தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இது குறித்த விவகாரம் வெடித்ததையடுத்து காவி துண்டு அணிந்து இந்துத்துவா மாணவர்கள் வரத் தொடங்கினர். இதனால் விவகாரம் மேலும் சூடுபிடித்தது.

    ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அங்கம் அல்ல.. குரானில் 7 முறை மட்டுமே இடம்பெற்ற ஹிஜாப்!.. கேரளா ஆளுநர்! ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அங்கம் அல்ல.. குரானில் 7 முறை மட்டுமே இடம்பெற்ற ஹிஜாப்!.. கேரளா ஆளுநர்!

     வழக்கறிஞர் காமத்

    வழக்கறிஞர் காமத்

    இந்த நிலையில் ஹிஜாப் அணிய கூடாது என்ற அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என மாணவிகள் சிலர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மாணவிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காமத், உயர்நீதிமன்றத்தில் வாதிடுகையில் ஹிஜாப் அணிவது இஸ்லாமியர்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி எனவும் அதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார். மேலும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு எவருக்கும் முன்பாக பெண்கள் தலையில் சூடுவது கடமை என்று குர்ஆன் வசனங்களையும் அவர் மேற்கோள் காட்டி வாதிட்டார். கல்லூரி நிர்வாகம் அளித்த உத்தரவால் இஸ்லாமிய மாணவிகளின் அடிப்படை உரிமை பிணைக்கைதியாக உள்ளது எனவும் ஹிஜாப் அணிவது மாநில அரசு சொல்வது போல தீங்கானது அல்ல என்றும் வாதிட்டார்.

     வலதுசாரிகள் குறி

    வலதுசாரிகள் குறி

    இந்த நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்களின் ஹிஜாப் அணியும் உரிமைக்காக போராடும் மாணவர்களை பாதுகாப்பதற்காக இஸ்லாமிய நூல்களை மேற்கோள் காட்டி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், வலதுசாரி மற்றும் இந்துத்துவ அமைப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். அவர் இந்து மதத்திற்கு எதிரான ஒரு காரணத்தை ஆதரிப்பதாக அவர் மீது முத்திரை குத்தப்பட்டது இந்நிலையில் வழக்கறிஞர் காமத்துக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமகிருஷ்ண ஆஸ்ரமம் ஆதரவு அளித்துள்ளது.

     சர்ச்சை தேவையற்றது

    சர்ச்சை தேவையற்றது

    கர்நாடகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான மோசமான சர்ச்சை "தேவையற்றது, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக அல்ல" என்று கார்வாரில் உள்ள ராமகிருஷ்ண ஆசிரமம் கூறியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணியும் உரிமைக்காகப் போராடும் மாணவர்களைப் பாதுகாப்பதற்காக இஸ்லாமிய நூல்களை மேற்கோள் காட்டி வலதுசாரி மற்றும் இந்துத்வா அமைப்பினரால் குறிவைக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், இந்து மதத்திற்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை என்று அந்த ஆசிரமத்தின் தலைமை குருவான சுவாமி பவேஷானந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

     மக்கள் வேதனை

    மக்கள் வேதனை

    "பள்ளிகள்/கல்லூரிகளில் முஸ்லிம் பெண்களின் ஆடைக் கட்டுப்பாடு குறித்து தேவையற்ற விவாதம் நடந்து வருகிறது, மேலும், சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் இது தொடர்பாக பொங்கி எழும் சர்ச்சையைக் கண்டு நான் வேதனைப்படுகிறேன். இது நிச்சயமாக நல்லது இல்லை எனவும், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ தேவதத் காமத்தின் பெயர் இந்த சர்ச்சையில் இழுக்கப்படுவதைக் கண்டு நான் மிகவும் வேதனைப்படுகிறேன், ஏனெனில் அவர் நீதிமன்றத்தில் ஒரு தரப்பு வழக்கறிஞராக இருந்தார் எனக் கூறியுள்ள சுவாமி பவேஷானந்த், "சிலர் அவரை இந்து மதத்திற்கு எதிரான ஒரு காரணத்தை ஆதரிப்பதாக முத்திரை குத்த முயற்சிக்கின்றனர். இந்த கருத்து முற்றிலும் தேவையற்றது மற்றும் அடிப்படையற்றது எனவும், அவர் இந்து மதத்திற்கு எதிரானவர் என்றும் முத்திரை குத்த முடியாது என்று சுவாமி பாவேஷானந்த் கூறியுள்ளார்.

    English summary
    The Ramakrishna Ashram has backed Devadat Kamath, a lawyer representing Islamic students in the hijab case, as Hindu groups have strongly condemned him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X