தீவிரவாத பயிற்சி பெற்றவங்க! ஹிஜாப்பிற்காக வழக்கு தொடர்ந்த மாணவிகள் மீது பாஜக பிரமுகர் குற்றச்சாட்டு
பெங்களூரு: ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்துப் பேசிய உடுப்பி கல்லூரி மாணவிகளை பயங்கரவாத அமைப்பிடம் பயிற்சி பெற்றவர்கள் என பாஜக பிரமுகர் விமர்சித்து உள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு PU கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் ஒரு மாதத்துக்கும் மேலாக வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியக்கூடாது என்றும் சீருடையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. அதனை அடிப்படையாக கொண்டே தொடர்ந்து மாணவிகளை அனுமதிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்தது.

ஹிஜாபுக்காக உடுப்பி மாணவிகள் வழக்கு
இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் குந்தபுராவில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா மாணவர் அமைப்பினர் காவித் துண்டு அணிந்து வகுப்புக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த பிரச்சனையும் போராட்டமும் மற்ற கல்லூரிகளுக்கும் பரவி கர்நாடகாவில் வன்முறையாக வெடித்தது.

கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இதனிடையே உடுப்பி மாணவிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

மாணவிகள் குற்றச்சாட்டு
கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த, வழக்கு தொடர்ந்த உடுப்பி மாணவிகள், "சொந்த நாட்டிலேயே துரோகம் இழைக்கப்பட்டதாக உணர்கிறோம். அம்பேத்கர் தற்போது உயிரோடு இருந்திருந்தால் இந்த தீர்ப்பை கேட்டு கண்ணீர் வடித்து இருப்பார். மதம் முக்கியமா? கல்வி முக்கியமா? என்று கேள்வி எழுப்புபவர்கள், அரசாங்கத்திடம் கல்வி முக்கியமா? சீருடை முக்கியமா? என்று கேளுங்கள். நாங்கள் மனம் உடைந்து போய் இருக்கிறோம். ஹிஜாபுடன் கல்வி கற்போம். எங்களை படிக்கவிடாமல் தடுக்கின்றனர். இந்திய அரசியலமைப்பை நாங்கள் மதிக்கிறோம். அது மத அடையாளங்களை பயன்படுத்த உரிமை தந்துள்ளது. ஆனால், அரசை இயக்குபவர்கள் அதை தவறாக பயன்படுத்துகின்றனர்." என்று குற்றம்சாட்டினார்.

கல்லூரி துணை முதல்வரின் சர்ச்சை கருத்து
இதனிடையே ஹிஜாப் தீர்ப்பு குறித்து உடுப்பு அரசு பி.யு.கல்லூரி துணை முதல்வரும், பாஜக தேசிய பிற்படுத்தப்பட்டோர் அணியின் பொதுச் செயலாளருமான யாஷ்பால் சுவர்னா கருத்து தெரிவித்து இருக்கிறார். அவர், "நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சித்து இருக்கும் மாணவிகளை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர். நீதிமன்றத்தையும் அரசையும் தொடர்புபடுத்துவது அறிவற்ற வாதம்.
Recommended Video

தீவிரவாத இயக்கத்திடம் பயிற்சி பெற்றவர்கள்
ஹிஜாப் தடைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த உடுப்பி மாணவிகள் தீவிரவாத இயக்கத்திடம் பயிற்சி பெற்று உள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு ஒன்று மாணவிகள் என்ன பேச வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது. மாணவிகள் அரசியலமைப்பை மதிக்காவிட்டால், ஹிஜாப் எங்கு அனுமதிக்கப்படுகிறதோ அங்கு சென்று மதத்தை பின்பற்றிக்கொள்ளட்டும்." என விமர்சித்துள்ளார்.
-
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம்












Click it and Unblock the Notifications