70 வயது அம்மா.. மகன், மகள், ஒரே வீட்டில் தற்கொலை.. பதறிப்போன பெங்களூர்..10 பேர் மீது பாய்ந்த வழக்கு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் மன உளைச்சல் காரணமாக ஒரே குடும்பதை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்தவர் சத்தியநாராயண ராவ். இவர் மருத்துவராவார், சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் குடியேறியுள்ளார்.

இவர்கள் நாகர்பாவியில் வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சத்தியநாராயண ராவ் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் அவரது குடும்பம் அங்கிருந்து மகாலட்சுமி லேஅவுட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டுக்கு குடிபெயர்ந்தது.

வழக்கறிஞர்

வழக்கறிஞர்

இங்கு சத்தியநாராயண ராவின் மனைவி யசோதா(70), அவர்களின் மகள் சுமன் (41), மகன் நரேஷ் (36) ஆகியோர் வசித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் மூவரும் நேற்று இவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர் 10 மீது குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, "யசோதாவுக்கு மூன்று பிள்ளைகள். இருவர் இவருடன் வசித்து வரும் நிலையில் மூத்த மகள் அபர்ணா மட்டும் ராஜாஜிநகரில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர் ஒரு வழக்கறிஞராவார். இவர் கொடுத்த புகாரின் பேரில்தான் நாங்கள் சடலங்களை மீட்டிருக்கிறோம்.

திருமணம்

திருமணம்

இந்த தற்கொலை சனிக்கிழமை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அன்று மாலை சுமார் 6 மணியளவில் இவர்கள் அபர்ணாவிடம் பேசியுள்ளார்கள். அதன் பின்னர் வேறு யாரிடமும் பேசவில்லை. இதற்கு முன்னர் இவர்கள் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளதாக அபர்ணா கூறியுள்ளார். அதாவது யசோதாவின் இரண்டாவது மகளான சுமனுக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில் சமீபத்தில் விவாகரத்து நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து இவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வந்திருக்கிறார். இவரின் சகோதரரான நரேஷ் தனது அக்காவின் திருமணத்திற்கு பின்னர் திருமணம் செய்துகொள்ளலாம் என்று இருந்திருக்கிறார்.

சண்டை

சண்டை

இந்த சூழலில்தான் குடும்பத்தில் அடிக்கடி சண்டை சர்ச்சரவுகள் ஏற்பட்டுள்ளது. இதனை அபர்ணாதான் சமாதானம் செய்து வைத்திருக்கிறார். ஆனால் சனிக்கிழமை அன்று சண்டை பெரியதாக வெடித்திருக்கிறது. அதேபோல அபர்ணா போனில் சமாதானம் செய்து வைத்துள்ளார். பின்னர் வழக்கம் போல அபர்ணா தன்னுடைய பணியை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். அன்று மாலை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு யாருடைய போனையும் இந்த மூவரும் எடுக்கவில்லை. அபர்ணாவும் இவர்களது பிளாட் பார்க்கிங்கில் இவர்களின் கார் நிற்பதை பார்த்துவிட்டு எதையும் பெரியதாக எடுத்துக்கொள்ளலாம் தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்திருக்கிறார்.

கடிதம்

கடிதம்

ஆனால் எத்தனை முறை கூப்பிட்டாலும் யசோதா குடும்பத்தினர் போன் எடுக்காமல் இருந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தவே அவர்களது வீட்டுக்குச் சென்று கதவை தட்டியுள்ளார். எவ்வளவு நேரம் தட்டியும் கதவும் திறக்கபடவில்லை. சந்தேகம் வலுவடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து கதவை உடைத்துள்ளனர். உள்ளே யசோதா உட்டப மூவரும் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். நாங்கள் அங்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இது தவிர ஒரு கடிதத்தையும் கைப்பற்றியுள்ளோம். இதில் தங்கள் இறப்புக்கு யாரும் காரணமல்ல என்று எழுதப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

ஆனாலும், உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னர்தான் கொலையைா? தற்கொலையா என்கிற முடிவுக்கு வர முடியும். அதேபோல இவர்கள் உடல்களின் அருகில் மாத்திரைகள் சில கிடந்துள்ளன. இந்த மாத்திரைகளை உட்கொண்டு கூட அவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம். சனிக்கிழமைக்கும், திங்கள் கிழமைக்கும் இடையில் சிலர் இவர்களை பார்க்க வந்துள்ளனர். இவர்கள் மீது அபர்ணா சந்தேகம் தெரிவித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்" என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+