Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய ஹிஜாப் வழக்கு.. சர்ச்சை முதல் தீர்ப்பு வரை.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து கல்லூரியில் பிரச்சனை எழுந்தது. மாணவர்கள் இடையே போட்டி போராட்டம் நடந்தது.

Recommended Video

    #BREAKING ஹிஜாபுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்.... கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

    ஹிஜாப் தடைக்கு எதிராக மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. முன்னதாக இந்த வழக்கு கடந்து வந்த விபரங்கள் வருமாறு:

    டிசம்பர் 2021: உடுப்பி பியூ பெண்கள் கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்காததால் 6 மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

    Karnataka High Court Verdict on Hijab Case - Heres the Timeline of the Case

    ஜனவரி 3: சிக்கமகளூர் மாவட்டம் கொப்பா அரசு கல்லூரியில் இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஹிஜாப் அணிய அனுமதித்தால் காவி தாவணி அணிய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    ஜனவரி 6: மங்களூரு பாம்பேயில் உள்ள கல்லூரியில் அதேபோல் போராட்டங்கள் நடந்தன.

    ஜனவரி 14: ஹிஜாப்புக்கு ஆதரவு தெரிவித்து உடுப்பியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை கல்லூரி முதல்வர் வகுப்புக்குள் அனுமதிக்கவில்ல என குற்றம்சாட்டினர்.

    ஜனவரி 26: கர்நாடகத்தில் உள்ள பியூ கல்லூரிகளில் சீருடைகள் குறித்த வழிகாட்டுதல்கள் தயாரிக்க கர்நாடகக் கல்வி துறை ஒரு குழுவை அமைத்தது.

    ஜனவரி 27: உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகளை நுழைய விடாத கர்நாடக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    ஜனவரி 31: உடுப்பி மகளிர் பியூ கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மார்ச் 21 வரை ஹிஜாப் தொடர்பான போராட்டம், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

    பிப்ரவரி 2: குந்தாப்புராவில் உள்ள அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப், காவிஷால் போராட்டம் நடந்தது.

    பிப்ரவரி 3: குந்தாப்புராவில் உள்ள கல்லூரி நிர்வாகம் ஹிஜாப், காவிஷால் அணிந்தவர்களை அனுமதிக்க மறுத்தது. பைந்தூர் அரசு கல்லூரியிலும் போராட்டம் துவங்கியது.

    பிப்ரவரி 5: உடுப்பி பந்தர்கார் கல்லூரிக்கு வெளியே "ஜெய் ஸ்ரீராம்" கோஷங்களை மாணவர்கள் எழுப்பினர்.

    இதையடுத்து அமைதி, ஒருமைப்பாட்டை சீர்குலைக்கு வகையில் ஆடைகள் அணிய தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. "கர்நாடக கல்வி சட்டம் 1983ன் 133 (2) வது பிரிவின் அடிப்படையில் யூனிபார்ம் கட்டாயமாக்கப்பட்டது. தனியார் பள்ளி நிர்வாகம் தங்கள் விருப்பப்படி சீருடையை தேர்வு செய்து கொள்ளலாம் என அர உத்தரவிட்டது.

    பிப்ரவரி 7: குந்தாபுரா அரசு பியூ கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் தனி வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டனர். சிக்கமகளூருவில் காவி மற்றும் நீல நிற சால்வை அணிந்த மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

    பிப்ரவரி 7: மாணவர்கள் அமைதி காக்குமாறு முதல்வர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தினார்.

    பிப்ரவரி 8: கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் தொடர்பான மனுக்களை விசாரிக்க துவங்கியது. மாணவர்கள் அமைதி காக்கும்படி நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அரசியலமைப்பின் அடிப்படையில் மட்டுமே வழக்கு விசாரிக்கப்படும். இதில் "உணர்ச்சி அல்லது உணர்வுகளுக்கு இடமில்லை'' என்றது.

    பிப்ரவரி 8: அனைத்து உயர்நிலை பள்ளிகள், கல்லூரிகளை 3 நாள் மூட முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.

    பிப்ரவரி 9: வழக்கு விசாரணைணை கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான மூவர் அமர்வுக்கு நீதிபதி கிருஷ்ணா தீட்சீத் மாற்றி உத்தரவிட்டார்.

    அதன்பின் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ் தீட்சித், ஜேஎம் காஜி விசாரணையை துவக்கினர்.

    பிப்ரவரி 10: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள ஹிஜாப் தொடர்பான மனுக்களை அங்கிருந்து மாற்றி அவசரமாக விசாரிக்க டெல்லி உச்ச நீதிமன்றம் மறுத்தது.

    பிப்ரவரி 14: மாணவிகள், ஆசிரியர்கள் ஹிஜாப்பை அகற்றிய பின் பள்ளிகளுக்கு செல்லும் வீடியோ, படங்கள் வைரலாகின.

    பிப்ரவரி 16: பள்ளி, கல்லூரிகளை ஒரு வாரம் மூடப்பட்டன.

    பிப்ரவரி 23: கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. வழக்கு முடியும் வரை பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது என கூறியது.

    பிப்ரவரி 25: வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

    மார்ச் 15: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தடையை எதிர்க்கும் வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்வதற்கு அனுமதி கேட்ட மனுக்களை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+