ரோடு சரியில்லை.. தேங்காய் உடைத்து காவி உடையில் உருண்டு புரண்ட ‛நித்தியானந்தா’! பரபர கர்நாடகம்
பெங்களூர்: கர்நாடகத்தில் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது எனக்கூறி சாலையில் அனுமன் படத்தை வைத்து பூஜை செய்து தேங்காய் உடைத்து காவி உடையில் உருண்டு புரண்டு ‛‛நித்தியானந்தா'' நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவழை வெளுத்து வாங்கியது. பல மாவட்டங்களில் இயல்பை விட மழை அளவு அதிகரித்தது. குறிப்பாக கர்நாடக தலைநகர் பெங்களூர் உள்பட பல மாவட்டங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் பல மாவட்டங்களில் உள்ள வீடுகள் மழைநீரால் சூழ்ந்துள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது மழை வெள்ளம் வடிந்தாலும் கூட இன்னும் பாதிப்பின் சுவடுகள் அழிந்ததாக இல்லை.

சாலைகள் சேதம்
ஏனென்றால் பெங்களூர் மற்றும் தென்கர்நாடக மாவட்டங்களில் பல இடங்களில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இதனால் மழை வெள்ள பிரச்சனை முடிந்தாலும் பள்ளமான சாலை என்பது இன்னொரு பிரச்சனையாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநகராட்சி, அரசு துறைகளிடம் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நூதன போராட்டம்
இந்நிலையில் தான் கடலோர கர்நாடக மாவட்டங்களாக உள்ள தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களிலும் பல சாலைகளில் குண்டும், குழியுமான சாலைகளாக மாறியுள்ளன. இதில் உடுப்பி-மணிப்பால் இடையேயான தேசிய நெடுஞ்சாலையின் ஒருபகுதியாக உள்ள உடுப்பி இந்திராலி பாலத்தின் மேல் உள்ள ரோடும் ஒன்றாகும். இந்த பால ரோடு பல்லாங்குழியாக மாறியுள்ளது. இதனை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு செல்ல நூதனமான முறையில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நித்யானந்தா உருள் சேவை
அதன்படி காவி உடை அணிந்து பள்ளமான பாலத்து ரோட்டில் அனுமன் படத்துக்கு பூஜை ‛நித்தியானந்தா' பூஜை செய்தார். அதன்பிறகு ரோட்டில் தேங்காய் உடைத்து ஆரத்தி எடுத்து உருள் சேவையை ‛நித்தியானந்தா' செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. மழை வெள்ளத்தால் பாதித்த ரோட்டை சரிசெய்ய ‛நித்தியானந்தா' உருள்சேவை நடத்தினார் என்ற தலைப்பில் இந்த வீடியோ பரவி வருகிறது.

யார் இந்த நித்தியானந்தா?
இந்நிலையில் தான் காவி உடையில் உருள் சேவை நடத்திய ‛நித்தியானந்தா' யார் என்பது? என்ற கேள்வியும் எழுந்துள்ளார். ஏராளமான நெட்டிசன்கள் கைலாசா நாட்டை உருவாக்கியதாக கூறப்படும் ‛நித்தியானந்தா' சாமியாரா? என வினவுகின்றனர். இதற்கும் பதில் உள்ளது. அதாவது தற்போது உருள் சேவை நடத்திய நபர் ஒரு சமூக ஆர்வலர் ஆவார். இவரது முழுப்பெயர் நித்தியானந்தா ஒலக்காடு. இவர் மக்கள் பிரச்சனைகளுக்கு விசித்திரமான போராட்டத்துக்கு பெயர் பெற்றவர். இந்நிலையில் தான் அவர் தற்போது இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

அதிகாரிகள் பாராமுகம்
இதுபற்றி நித்தியானந்தா ஒலக்காடு கூறுகையில், ‛‛உடுப்பி - மணிப்பால் இடையிலான தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. இந்திராலி ரயில்வே பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டாலும் கூட அதன் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இது விபத்து பகுதியாக உள்ளது. இதுபற்றி மக்கள் பிரதிநதிகள், அதிகாரிகள் கவலைப்படாமல் உள்ளதன. இதனால் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்'' என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications