பெங்களூரின் நம்பர் ஒன் பணக்காரர் யார் தெரியுமா? யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. வெளியான ஆய்வறிக்கை
பெங்களூர்: பெங்களூர் நகரில் வசிப்போரில் பெரும் பணக்காரராக முதலிடத்தில் யார் இருக்கிறார்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. இந்த நபர் இன்போசிஸ் இணை நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி கிடையாது. வேறு யார்? பார்க்கலாம் வாங்க
ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் உள்ள பெரும் பணக்காரர்கள் யார்? ஆசியாவில் பெரும் கோடீஸ்வரர் யார்? இந்தியாவில் அதிக சொத்து வைத்திருக்கும் தொழிலதிபர்கள் யார்? என்று தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு நிறுவனம் தான் Hurun.

இந்த நிறுவனம் என்பது ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் முக்கிய நகரங்களில் எத்தனை கோடீஸ்வரர்கள் உள்ளனர். அவர்களில் யார் முதலிடத்தில் உள்ளனர்? என்பது பற்றிய தகவலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் Hurun India Rich List 2024 என்ற பெயரில் அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில் இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூர் நகரில் எத்தனை பெரும் பணக்காரர்கள் உள்ளனர்? அதில் முதலிடத்தில் இருப்பது யார்? என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பெங்களூரை பொறுத்தவரை இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, பயோகான் தலைவர் மற்றும் கிரண் மஜூம்தார் உள்ளிட்டவர்கள் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். ஆனால் இந்த லிஸ்ட்டில் தற்போது பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
ஃபிரிட்ஜ்ஜில் 50 துண்டாக கிடந்த பெண்.. உடல் உறுப்பை இணைத்து.. மிரண்ட பெங்களூர் டாக்டர்கள்.. என்னாச்சு
அதாவது பெங்களூர் நகரில் வசிக்கும் பெரும் பணக்காரர்களின் லிஸ்ட்டில் விப்ரோவின் தலைவர் அசிம் பிரேம்ஜி உருவாகி உள்ளார். இவருக்கு மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 700 கோடி சொத்து உள்ளது. இவர் மொத்த இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார்.
மேலும் இந்த அறிக்கையின்படி இந்தியாவில் அதிக பணக்காரர்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலில் 3வது இடத்தில் பெங்களூர் உள்ளது. பெங்களூரில் 27 பேர் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். இதில் முதலிடத்தில் மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளது. அங்கு மொத்தம் 92 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். 2வது இடத்தில் டெல்லி உள்ளது. அங்கு 68 பெரும் பணக்காரர்கள் உள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் தான் பெங்களூர் உள்ளது.
சித்தராமையா தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. 'மூடா' முறைகேடு வழக்கு..சற்று நேரத்தில் ஹைகோர்ட் தீர்ப்பு
இதுதவிர இந்தியாவை பொறுத்தமட்டில் பெரும் பணக்காரர்களின் வரிசையில் முதலிடத்தில் தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளார். இவரது சொத்து மதிப்பு 11.6 லட்சம் கோடியாகும். 2வது இடத்தில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளார். இவருக்கு ரூ.10 லட்சம் கோடி சொத்து மதிப்பு உள்ளது. 3வது இடத்தில் எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 3.14 லட்சம் கோடியாக உள்ளது.
-
பெங்களூரில் நடைபெறும் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு.. தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ள அழைப்பு! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications