மாமியாரிடம்.. "ப்ளீஸ், என்னை விட்டுடு" கெஞ்சிய மருமகன்.. கடைசியில் நடந்த சம்பவம்.. என்னாச்சு?
மாமியார், மருமகனை தாக்கியதால் கைதாகி சிறையில் உள்ளார்
பெங்களூரு: மருமகன் செய்த காரியத்தினால், மாமியார் இன்று சிறை செல்லும் நிலைமை ஏற்பட்டு விட்டது.. இந்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
மாமியார் மருமகள் உறவு வலுவாக அமைந்தாலே அந்த குடும்பமே ஆரோக்கியமாக தழைத்து வளரும்.. மாமியார் மருமகள் என்பவர்கள், அம்மா பெண் போல அல்லது நல்ல தோழியாக இருந்தால் அதைவிட சிறப்பு வேறு இருக்க முடியாது.
இதேபோலத்தான் மாமியார் - மருமகன் உறவும்.. இன்னொரு தாயாக மாமியாரை பாவிக்கும் மருமகன்கள் கிடைப்பதும், இன்னொரு மகனாக மருமகனை அரவணைக்கும் மாமியார் கிடைப்பதும் அபூர்வம்தான்.

உறவு
சில சமயம், இந்த உறவுமுறைகளில் ஏற்படும் சிக்கலே, வன்முறைகளுக்கும், குடும்பம் சிதைவதற்கும் காரணமாகவிடுகிறது. அந்தவகையில் கர்நாடகாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள ஒரு மருமகன் தினமும் குடித்துவிட்டு வந்து மாமியாரையும் சேர்த்து அடித்து உதைப்பாராம். பெங்களூரு ஆந்திரஹள்ளியில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சகுந்தலா
அந்த நபரின் பெயர் கேசவ்.. 44 வயதாகிறது.. மனைவி பெயர் சகுந்தலா.. 38 வயதாகிறது.. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.. மேலும் அவர்களுடன் சகுந்தலாவின் அம்மா பர்வதம்மாவும் தங்கியிருக்கிறார்.. அவருக்கு 60 வயதாகிறது.. அனைவருமே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.. கேசவ் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார்.. ஆனால், நிறைய குடி பழக்கம் இருந்து வந்துள்ளது.. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால், மனைவியை சரமாரியாக தாக்குவாராம்..

மாமியார்
இதை தடுக்க மாமியார் ஓடிவந்தால், அவருக்கும் இதேபோல் அடி, உதை விழுமாம். தினமும் அவர்களை தரக்குறைவாக பேசுவதும், அடித்து கொடுமைப்படுத்துவதுமாக இருந்துள்ளார் கேசவ்.. இவர் தண்ணி அடித்துவிட்டால், பெற்ற குழந்தைகள் என்றும் பார்க்க மாட்டார்.. கையில் கிடைத்ததை கொண்டு அவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளார்... இதனால் பிள்ளைகள் துடிதுடித்து அழுவதை கண்டு, பர்வதம்மாளும் கதறி அழுவாராம்.. இப்படித்தான் சம்பவத்தன்றும் கேசவ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த குழந்தைகளை தாக்கி உள்ளார்..

மாமியார் விளாசல்
இதை பார்த்து பார்த்து பொறுமையிழந்த பர்வதம்மாள், ஏன் இப்படி தினமும் குடித்து விட்டு டார்ச்சர் செய்கிறாய் என்று மருமகனை கேட்டுள்ளர்.. இப்படி கேள்வி கேட்டதும் மருமகனுக்கு ஆத்திரம் வந்து, வழக்கம்போல் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார்.. இதனால், ஆத்திரம் அடைந்த மாமியார் அங்கிருந்த ஒரு கனமான தடியை எடுத்து வந்து மருமகனை விளாச தொடங்கினார்.. இதனால் வலி பொறுக்க முடியாத கேசவ், கதறி துடித்தார்.. தன்னை விட்டு விடுமாறு மாமியாரிடம் கெஞ்சினார்.. அப்போதும் மாமியார் விடவில்லை..

மருமகன் - மாமியார்
குழந்தைகளையும், மகளையும் அடித்து உதைத்து சித்ரவதை செய்த கோபத்தை எல்லாம் மனதில் வைத்து, மருமகனை துவைத்து எடுத்துவிட்டார்.. அடுத்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கேசவ் அதே இடத்தில் சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு இப்போது அவருக்கு உடல்நிலை சீரியஸாக இருக்கிறதாம்.. தீவிர சிகிச்சையும் நடந்து வருகிறது.. இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியாரை கைது செய்து, விசாரித்து வருகிறார்கள்..!
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications