170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் சில சமுதாயங்களின் வாக்குகள் வெளிப்படையாக பேசப்படாத போதும், தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் அளவுக்கு தாக்கம் செலுத்தி கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், முத்தரையர் சமுதாயம் பல மாவட்டங்களில் மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது.. வரப்போகும் தேர்தலில் இச்சமுதாய ஓட்டுகள் யாருக்கு சாதகமாக அமைய போகின்றன? இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, பெரம்பலூர் உள்ளிட்ட மத்திய மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் முத்தரையர் சமூகத்தின் வாக்கு வங்கி என்பது கணிசமாக உள்ளது. அதாவது கிட்டத்தட்ட 30 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி யாருக்கு என்பதைக் தீர்மானிக்கும் அளவுக்கு முத்தரையர் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

குறிப்பாக, தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் மட்டும் 5.38 லட்சம் முத்தரையர் வாக்குகள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதேபோல் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இச்சமுதாயத்தின் அரசியல் செல்வாக்கு கணிசமாகவே உள்ளது.
முத்தரையர் முக்கியத்துவம்
அந்த காலத்திலேயே முத்தரையர் சமூகத்தின் வாக்குகள் நீண்ட காலமாக அதிமுகவுடன் உறுதியான பிணைப்பிலேயே இருந்துள்ளது.. அதுவும் எம்ஜிஆர் காலத்தில் முத்தரையர் வாக்குகள் "லட்டு போல" அதிமுகவுக்கே சென்றதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு எம்ஜிஆர் மீது இச்சமூகத்துக்கு தனிப்பட்ட ஈர்ப்பு இருந்தது.
எம்ஜிஆருக்கு பிறகு, ஜெயலலிதா தலைமையிலும் இந்த ஆதரவு சிதறாமல் பாதுகாக்கப்பட்டது. முத்தரையர் சமூகத்தின் நம்பிக்கையை நிலைநாட்டி, அதிமுக வெற்றிகளுக்கான அடித்தளமாக அந்த வாக்கு வங்கியை ஜெயலலிதா மாற்றியமைத்தார் என்பதே பொதுவான அரசியல் மதிப்பீடு ஆகும்..
அதாவது, அப்போதைய காங்கிரஸ் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி ஜெயலலிதாவால் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்க அரசியல் வரலாறு. முத்தரையர் வாக்குகளின் செல்வாக்கு எந்தளவிற்கு இருந்தது என்பதற்கு, லால்குடி தொகுதியில் நிலவிய சூழலே சாட்சி. அந்தத் தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என்பதால் தான், அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதிக்கு மாற வேண்டிய சூழல் உருவானது.
மிஸ் பண்ணிட்டாரு எடப்பாடி பழனிசாமி
ஆனால், கடந்த முறை எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றதுமே, அதிமுகவில் முத்தரையர் சமூகத்தின் அரசியல் செல்வாக்கு மெல்ல மெல்ல குறைந்ததாக சொல்லப்படுகிறது. கட்சியின் முக்கிய முடிவுகளில் அந்த சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்தது, வாக்கு வங்கியில் ஒரு அளவு தளர்வை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021 தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. முத்தரையர் சமூகம் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் ஒன்றில் கூட அ.தி.மு.க. கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை. இந்த வாக்குகள் பெருமளவில் திமுக பக்கம் சாய்ந்தன.
இதன் விளைவாகவே, வரவிருக்கும் தேர்தல்களில் முத்தரையர் ஆதரவை மீட்டெடுக்க அதிமுக பல்வேறு அரசியல் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் நாம் பலமுறை செய்திகளை வெளியிட்டிருந்தோம்..
திமுகவுக்கு களம் சாதகமா?
இப்போது தேர்தல் கிட்ட நெருங்கிவிட்டது.. 170 தொகுதிகளில் களம் காண முடிவு செய்துள்ள திமுக, இந்த முறையும் முத்தரையர் வாக்குகளை அள்ளிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.. அதேபோல முத்தரையர் அமைப்புகளில் செல்வாக்கு பெற்றுள்ள "தமிழர் தேசம்" கட்சியின் நிறுவனரும், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவருமான செல்வகுமாருக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது.
திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதற்கு போட்டியாக அதிமுகவும் தனது பலத்தை சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவரும், சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான பரதனுக்கு ஒரு தொகுதியை அதிமுக ஒதுக்கியுள்ளது. அவர் முத்தரையர் சமூகத்தினர் அடர்த்தியாக வாழும் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தவெக விஜய்
2 பெரும் திராவிடக் கூட்டணிகளிலும் முத்தரையர் சங்கங்கள் அங்கம் வகிப்பதால், இந்த முறை வாக்குகள் சிதறுமா அல்லது ஒரு பக்கம் திரளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு நடுவில் தவெகவின் வருகை கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் தவெகவில் இணைந்திருக்கிறார்..
இந்த முறையும் திமுக கலக்குமா?
முத்தரையர் பெரும்பான்மை தொகுதிகளில் அவர் தீவிரமாக ஆதரவு திரட்டி வருவதால், இது பாரம்பரிய வாக்கு வங்கிகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது...
அதிலும் திமுக அள்ளுமா என்ற ஆர்வம் சற்று அதிகமாக உள்ளது.. காரணம், மெய்யநாதன் போன்றவர்களை அமைச்சராக்கியது, இந்த சமூக அரசியல் அணுகுமுறைக்கு ஒரு உதாரணமாகும்.. முத்தரையர் போன்ற சிறு சமூகங்களையும், முக்குலத்தோர் வாக்கு வங்கியின் பெரும்பகுதியையும் திமுக கடந்த முறையே தன் பக்கம் ஈர்த்துவிட்டதால், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் பெரிய பலன் இருக்காது என்ற அரசியல் கணிப்புகளும் முன்வைக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், அதிமுகவின் வேகம், தவெகவின் வருகை, திமுகவின் வெற்றியை பறிக்குமா? அல்லது முன்புபோலவே இந்த முறையும் முத்தரையரின் ஓட்டுக்களை திமுக லட்டுபோல அள்ளுமா தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications